1. வாழ்வும் நலமும்

வீட்டிலேயே, குளியல் பொடி தயாரிப்பது எப்படி? விவரங்கள் உள்ளே!

Deiva Bindhiya
Deiva Bindhiya
How to make bath powder at home? Details inside!

அழகை விரும்பாத மனிதர்களே இல்லை, அல்லவா. மக்கள், அழகான முகத்தை பெற இன்றைக்கும், பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க பலர் பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ளனர். இதை வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுப் பயன்களை அடைந்திருக்க வாய்ப்பில்லை.

இயற்கையான குளியல் பொடி, தயாரிக்கும் முறை:

இதற்கு மாறாக முகத்தை கெடுத்துக்கொண்டவர்கள் தான் ஏராளம், என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. முகத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்திருக்கின்றன. இந்த மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே முக அழகைப் பெறலாம், அதற்கு தேவையான பொருட்களைப் பற்றி வாருங்கள் பார்ப்போம்.

  • உலர்ந்த மகிழம் பூ பொடி 200 கிராம்
  • கிச்சிலி கிழங்கு பொடி 100 கிராம்
  • கஸ்தூரி மஞ்சள் பொடி 100 கிராம்
  • கோரை கிழங்கு பொடி 100 கிராம்
  • உலர்ந்த சந்தனத் தூள் 150 கிராம் ஆகிய பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளுங்கள்.

இவற்றை ஒன்றாக கலந்து காரம் இல்லாத அம்மியில் சுத்தமான பன்னீர் விட்டு அரைத்து சிறிய தட்டைகளாக தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் தடவி வர நல்ல பயன் பெறலாம். அரை மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். சோப்பு போடக்கூடாது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களிலே முகம் பளபளக்கும், மேலும் முகம் மென்மையாகவும் மாறும்.

குளியல் பொடி (Bath powder):

இப்போது பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுவதை காண்கிறோம். இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படும் ஆபாயம் உள்ளது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகிறது என்பதும் குறிப்பிடதக்கது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கும், என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

குளியல்பொடி தயாரிக்கும் மற்றொரு முறை:

  • சோம்பு 100 கிராம்
  • கஸ்தூரி மஞ்சள் 100 கிராம்
  • வெட்டி வேர் 200 கிராம்
  • அகில் கட்டை 200 கிராம்
  • சந்தனத் தூள் 300 கிராம்
  • கார்போக அரிசி 200 கிராம்
  • தும்மராஷ்டம் 200 கிராம்
  • விலாமிச்சை 200 கிராம்
  • கோரைக்கிழங்கு 200 கிராம்
  • கோஷ்டம் 200 கிராம்
  • ஏலரிசி 200 கிராம்
  • பாசிப்பயறு 500 கிராம்

காயான பிறகு பூவாவது எது? பழமான பிறகு காயாவது எது?

இவை அனைத்தையும் சரியான அளவில், தனித்தனியாக காயவைத்து, தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும்போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து பயன்படுத்தி வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும் மற்றும் சருமம் அரோக்கியமாகவும் இருக்கும். இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை குணமாகும். மேலும் உடலில், வேர்வையினால் உண்டாகும் நாற்றம், நீங்க இது உதவும். மேனி அழகுபெறும், இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும், இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் படிக்க:

ஆராய்ச்சி மண் வள அட்டை: இதனால் பலன் என்ன?

முதியோர் உதவித் தொகை திட்டம்: விண்ணப்பிப்பது எப்படி?

English Summary: How to make bath powder at home? Details inside! Published on: 05 May 2022, 05:35 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.