1. வாழ்வும் நலமும்

மிதமான பாதிப்பை தரும் வாக்கிங் நிமோனியா: எளிய தடுப்பு முறைகள்!

R. Balakrishnan
R. Balakrishnan
Walking Pneumonia

வழக்கமான பாக்டீரியா தொற்றால் நுரையீரலில் ஏற்படும் தீவிர நிமோனியா பாதிப்பாக இல்லாமல், மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இல்லாத, மிதமான பாதிப்பாக இருப்பது, 'வாக்கிங் நிமோனியா (Walking Pneumonia)' எனப்படும். இது சுற்றுப்புறத்தில் உள்ள வீரியம் குறைந்த பாக்டீரியா, வைரஸ் தொற்றுகளால் ஏற்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ், புளூ தொற்றால் வாக்கிங் நிமோனியா பாதிப்பு ஏற்படுகிறது. 70 - 96 மணி நேரம் வரை விடாத காய்ச்சல், இருமல் இதன் அறிகுறிகள். இது தவிர சுவாசிப்பதில் சிரமம், மூச்சிரைப்பு போன்றவையும் வரலாம். சிலருக்கு மார்பு பகுதியில் வலி இருக்கும்; மூச்சை உள்ளிழுக்கையில் இந்த வலி அதிகமாகும்.

வாக்கிங் நிமோனியா

வாக்கிங் நிமோனியா பாதிப்பு ஏற்பட்ட 85 சதவீதம் பேருக்கு காய்ச்சல், இருமல் பொதுவான அறிகுறிகள். மீதி 15 சதவீதம் பேருக்கு எக்ஸ்ரே சோதனையில் நிமோனியா பாதிப்பு தெரியும்; ஆனால் காய்ச்சல், இருமல் இருக்காது.

முக்கிய காரணி

பசியின்மை, குமட்டல், குளிர், நடுக்கம், ரத்த அழுத்தம் குறைவது போன்ற எந்த தொற்று வந்தாலும் ஏற்படும் அறிகுறிகள் இதிலும் இருக்கலாம். வாக்கிங் நிமோனியா பாதிப்பை ஏற்படுத்துவதில், வைரஸ் முக்கிய காரணியாக உள்ளது.

இந்த வைரஸ் கிருமிகள், 2 வயதிற்கு குறைந்த குழந்தைகள், 60 வயதிற்கு மேற்பட்டவர்களை அதிகம் பாதிக்கிறது. நீண்ட காலமாக இருக்கும் சர்க்கரை கோளாறு, சீறுநீரக கோளாறுகள், ஆர்த்ரடிஸ் போன்றவற்றுக்கு தொடர்ந்து தரப்படும் ஸ்டிராய்டு மாத்திரைகளால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வாக்கிங் நிமோனியா உண்டாகலாம்.

வைரசால் ஏற்படும் இப்பிரச்னைக்கு, ஆன்டி வைரல் மருந்துகள் உள்ளன. ஆன்டி பயாடிக் மருந்துகள் (Anti Biotic Medicines) எந்த விதத்திலும் பலன் தராது. மருந்துகளுடன் நிறைய திரவ ஆகாரம், ஓய்வு இருந்தால் போதும்.

டாக்டர் சுரேஷ் ராமசுப்பன்,
நுரையீரல், சுவாச கோளாறுகள்
மருத்துவ ஆலோசகர்,
அப்பல்லோ மருத்துவமனை குழுமம்.

மேலும் படிக்க

5 மணி நேரத்தில் 5 ஆயிரம் பனை விதைகளை நட்ட காவல்துறை!

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தனி மனித சுத்தம் அவசியம்!

English Summary: Mild Moderate Walking Pneumonia: Simple Prevention! Published on: 19 October 2021, 09:43 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.