1. வாழ்வும் நலமும்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தனி மனித சுத்தம் அவசியம்!

R. Balakrishnan
R. Balakrishnan

Individual human cleaning

சத்துமிக்க உணவுகள், உடற்பயிற்சி, (Excercise), நல்ல தூக்கம் என்று தொடங்கி நீளும் பட்டியலில், நாம் எப்போதும் மறந்துவிடுகிற ஒரு விஷயம் தனிமனித சுகாதாரம். ஆமாம், உலகம் உங்களிலிருந்தே தொடங்குகிறது. உங்களிடம் தான் முடிகிறது. எல்லாமே சரியாக இருந்து, நீங்கள் அதற்குத் தகுதியானவராக இல்லாவிட்டால் சுகாதாரமான வாழ்க்கை என்ற லட்சியத்தை உங்களால் அடைய முடியாது.

தனிமனித சுத்தம்

சுகாதார விஷயத்தில் அதிக விழிப்புணர்வு கொண்டவர்களாகத் தங்களைக் காண்பித்துக் கொள்கிறவர்கள் கூட, தனிமனித சுத்தம் என்ற விஷயத்தில் பலவீனமாகவே இருப்பார்கள். அதுவும் நம்மவர்களிடையே அந்த விழிப்புணர்வு இன்னும் போதுமான அளவு உருவாகவில்லை என்பதைப் பல நேரங்களில்
தெளிவாக உணர முடிகிறது.

பொது இடங்களில் எச்சில் துப்புதல், சளி சிந்துதல், கைக்குட்டை பயன்படுத்தாமல் தும்முதல், பணத்தை எண்ணும்போதும் புத்தகம் படிக்கும்போதும் எச்சில் தொட்டு திருப்புதல், புகை பிடித்தல் (Smoking), திறந்த வெளியிடங்களில் மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் போன்றவற்றை எல்லா இடங்களிலும் தினசரி பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். 

சுகாதாரக் கேடுகள்

இது மாதிரியான தனிமனித சுகாதாரக் கேடு, அவரது ஆரோக்கியத்தையும் கெடுத்து மற்றவர்களின் நலனையும் பாதிக்கிறது. மற்றவர்கள் சுட்டிக்காட்டும் அளவுக்கு இல்லாமல் சங்கடப்படுத்தும், அருவெறுப்பை உண்டாக்கும் விஷயங்களாகவும் தனிமனித சுகாதாரக் கேடுகள் இருக்கின்றன. Common cold virus போன்ற பல பாதிப்புகளும் இதனால் ஏற்படுகிறது. திறந்த வெளியிடங்களில் மலம், சிறுநீர் கழிப்பதால் அவை நீர்நிலைகளில் கலக்கும் அபாயம் இருப்பதையும் உணர வேண்டும். இதன் காரணமாக காலரா, டைபாய்டு போன்ற நோய்கள் பரவ வாய்ப்பு இருப்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

அதனால், சில எளிய பழக்க வழக்கங்களைப் பின்பற்ற தொடங்க வேண்டும். கழிவறையில் மட்டுமே சிறுநீர், மலம் கழிக்கும் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். கழிவறை சென்று வந்த பிறகு சோப் போட்டு கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். மூக்கு நோண்டுகிற பழக்கத்தைத் தவிர்க்க முகம் கழுவும்போதே மூக்கை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். எச்சில் தொட்டு புத்தகத்தைத் திருப்புவது ஒரு மூட நம்பிக்கைதான். சாதாரணமாக புத்தகத்தைத் திருப்பினாலே பக்கங்கள் மாறும் என்பதையும் உணர வேண்டும்.

நகங்களை வாரம் ஒருமுறை குளித்த பிறகு வெட்டிவிட வேண்டும். தினசரி தவறாமல் குளிப்பது, முதல்நாள் அணிந்த ஆடையை அடுத்த நாள் அணியாமல் இருப்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும். பெரிய பெரிய மாற்றங்கள் தானாகவே நிகழும்!

மேலும் படிக்க

மழைக் காலத்தில் ஏற்படும் சிறுசிறு தொல்லைகளுக்கு வீட்டு வைத்தியம்

சிறுநீரகத்தை பாழாக்கும் 8 பொதுவான தவறுகள்!

English Summary: Individual human cleaning is essential for healthy living!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.