1. வாழ்வும் நலமும்

கிவி பழத்தில் இவ்வளவு நன்மைகளா? இன்றே தெரிந்துகொள்ளுங்க!!

Poonguzhali R
Poonguzhali R
So many benefits of kiwi fruit? Find Out Today!!

கிவி பழத்தில் பல்வேறு வைட்டமின்களும் ஊட்டச்சத்துக்களும் தாதுக்களும் நிறைந்துள்ளன. அதோடு, புளிப்பும் இனிப்பும் கலந்த சுவை இருக்கும். இந்த பழத்தைச் சாப்பிடுபவர்களுக்கு சக்கரை நோய் இருந்தால், கட்டுக்குள் வரும். அதேபோன்று கிவி பழத்தை சாப்பிடுபவர்களுக்கு ஆஸ்துமா பிரச்னையும் குணமடையும் எனக் கூறப்படுகிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.

உண்பதற்கு தகுந்த பழங்களில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இதைச் சாப்பிடுவதால் பல தீராத நோய்கள் கூட குணமடைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படிப்பட்ட பழங்களில் ஒன்றுதான் கிவி ஆகும். இதனுடைய இனிப்பு புளிப்பு சுவை தனித்துவமானது.

இதில் பல வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். அவர்களுக்கு விரைவில் நோய் பாதிப்பு கட்டுக்குள் வரும். அதேபோல மூச்சுத்திணறல், ஆஸ்துமா பிரச்னை கொண்டவர்களும் கிவி பழத்தை சாப்பிட்டு வந்தால், நல்ல பலனை அடையலாம் எனக் கூறப்படுகிறது.

கிவிப் பழத்தில் நார்ச்சத்து, கொழுப்பு, புரதம், வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, ஃபோலேட், செம்பு, பொட்டாஸியம் முதலான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதனால் அவ்வப்போது, கிவிப் பழத்தை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். சக்கரை, சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் தான் கிவிப் பழத்தைச் சாப்பிட வேண்டும் என்று இல்லை. குறிப்பிட்ட நோய்களை வராமல் தடுக்கவும் இந்த பழத்தினைச் சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்ளலாம்.

கிவியில் வைட்டமின் சி நிறைந்து இருக்கிறது. அதனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மேல் ஆஸ்துமா, மேல் சுவாசக்குழாய் திணறல் போன்ற பிரச்னைகளை நீக்கும். மேலும், இதை தொடர்ந்து சாப்பிடுவதால் நுரையீரல் செயல்பாடும் மேம்படுகிறது. கிவியில் உள்ள வைட்டமின் சி மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் இருக்கின்றன. இரைப்பைக் குழாயில் உள்ள உணவில் இருந்து இரும்பைச் சிறப்பாக உறிஞ்சுவதற்கு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் இரத்த சோகையை குணப்படுத்தவும் உதவுகிறது. கிவி மூளையில் செரோடோனின் அளவினை அதிகரிப்பதன் மூலம் ஒழுங்கற்ற தூக்கத்தைக் குணப்படுத்த ஏதுவாகிறது. இதன்மூலம் உடலும் மனதும் அமைதி பெறும் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

பற்களில் மஞ்சள் கறையைப் போக்க எளிய டிப்ஸ்!

சர்க்கரை நோயை விரட்ட இந்த ஜூஸ்-ஐ குடித்துப் பாருங்க!

English Summary: So many benefits of kiwi fruit? Find Out Today!! Published on: 23 November 2022, 04:16 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.