1. வாழ்வும் நலமும்

உலக ஆஸ்துமா தினம்- இந்த அறிகுறி இருந்தால் மருத்துவரை பாருங்க!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
World Asthma Day is celebrated on may 2

ஆஸ்துமாவினால் உலகளவில் 300 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதிக்கப்பட்டு உள்ளனர். நிபுணர்களின் கூற்றுப்படி, இவர்களில் 38 மில்லியன் பேர் இந்தியாவில் வாழ்கின்றனர். ஆஸ்துமா அறிகுறி உள்ளவர்கள் முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் நோயின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக ஆஸ்துமா தினம்:

உலக ஆஸ்துமா தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் செவ்வாய் கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த நாள்பட்ட நோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் இன்று (மே-2) ஆம் தேதி உலக ஆஸ்துமா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆஸ்துமா என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவரையும் பாதிக்கும் நோயாகும். இது குழந்தைகளிடையே மிகவும் பரவலாக காணப்படும் நோய்களில் ஒன்றாகும். ஆஸ்துமா நுரையீரலில் உள்ள காற்றுப்பாதைகளின் வீக்கம் மற்றும் குறுகலால் ஏற்படுகிறது. ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவருக்கு சுவாசிப்பதில் சிரமம், மார்பு இறுக்கம் மற்றும் இருமல், மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்படுகிறது.

சென்னை, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில் நிலவும் அதிக அளவிலான காற்று மாசுபாடும் பலருக்கு ஆஸ்துமா அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதிலும் குறிப்பாக இந்நோய் தாக்குதலுக்கு குழந்தைகள் அதிகளவில் பாதிப்படைய வாய்புள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.

"பல இளம் உயிர்கள் ஆஸ்துமாவிற்கு முறையான சிகிச்சை எடுக்காமல் உயிரிழந்துள்ளனர். பல குழந்தைகள் தங்கள் பள்ளி வாழ்வை ஆஸ்துமா தொற்றினால் தவறவிடுகிறார்கள், மேலும் ஆஸ்துமா தாக்குதலால் இளைஞர்கள் தங்கள் வேலையை இழக்கிறார்கள்," என டாக்டர் ரவி சேகர் ஜா, (ஃபரிதாபாத் ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் மற்றும் யூனிட் ஹெட்) முன்னணி நாளிதழ் ஒன்றிற்கு ஆஸ்துமா தாக்குதலினால் ஏற்படும் பாதிப்பு குறித்து குறிப்பிட்டுள்ளார்.

புகைப்பிடித்தல் ஆஸ்துமா தாக்குதல்களைத் தூண்டுகிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் காற்று மாசுபாடும் ஆஸ்துமாவின் மிக முக்கியமான தூண்டுதல்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. காற்று மாசுபாடு தவிர, வைரஸ் தொற்று, மோசமான இன்ஹேலர் பயன்பாடு, மாறும் வானிலை மற்றும் கடுமையான வாசனை ஆகியவை ஆஸ்துமா தாக்குதலுக்கான பிற பொதுவான தூண்டுதல்களாகும்.

"பெரும்பாலான ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஒவ்வாமை இருக்கிறது. பொதுவாக மார்பு இறுக்கம், மூச்சுத் திணறல், இருமல் போன்ற அறிகுறிகளை இரவில் அல்லது அதிகாலையில் மோசமாக அனுபவிக்கிறார்கள். தும்மல் மற்றும் தோல் வெடிப்பு போன்ற பிற ஒவ்வாமை வெளிப்பாடுகளும் ஆஸ்துமா அறிகுறியாக குறிப்பிடப்படுகிறது. ஆஸ்துமாவிற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளித்தால், எளிதாக அதனை கட்டுப்படுத்தலாம்" என்று டாக்டர் ரவி சேகர் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகள் இன்ஹேலர்களை எடுக்க பயப்படுகிறார்கள். இது மீண்டும் தாக்குதல்களுக்கு வழிவகுக்கிறது என்று மருத்துவர் ரவி சேகர் குறிப்பிடுகிறார்.

pic courtesy: ADDA

மேலும் காண்க:

கோடைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய ஆடை, நகை, காலணிகள் என்னது?

English Summary: World Asthma Day is celebrated on may 2 Published on: 02 May 2023, 04:06 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.