1. செய்திகள்

இருமல் மருந்தில் ஆபத்தான ரசாயனம்: வெளியான அதிர்ச்சத் தகவல்!

R. Balakrishnan
R. Balakrishnan
Cough Medicine

இந்தியாவில் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் தயார் செய்யப்பட்ட இருமல் மருந்தில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இருமல் மருந்து

இந்தியாவில் அதிகமான மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் பல மருந்துகள் தயார் செய்யப்பட்டு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் இந்தியாவில் தயார் செய்யப்பட்ட குவாய்ஃபென்சின் என்ற இருமல் மருந்தில் டை- எதிலீன் கிளைக்கால்‌ மற்றும் எதிலீன் கிளைக்கால் என்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்த மருந்துகள் மைக்ரோனேசியா‌மற்றும் மார்ஷல்ஸ் தீவுகள் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் அது குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் உலக சுகாதார நிறுவனம், அதில் ஊறுவிளைவிக்கும் ரசாயனம் உள்ளதாக புகார் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மருந்தை உட்கொண்டால் மனிதர்களுக்கு நச்சுத்தன்மை மற்றும் மரணத்தை விளைவிக்கும் என ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டாளரான சிகிச்சை பொருட்கள் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மருந்துகளின் உற்பத்தியாளர் பஞ்சாப்பை தளமாகக் கொண்ட QP Pharmachem லிமிடெட் மற்றும் தயாரிப்பின் சந்தைப்படுத்துபவர் இந்தியாவின் ஹரியானாவை தளமாகக் கொண்ட டிரில்லியம் பார்மா என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

கறிவேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் பலமடங்கு நன்மை கிடைக்கும்!

மீண்டும் உயரந்த முட்டை விலை: அதிருப்தியில் பொதுமக்கள்!

English Summary: Dangerous chemical in cough medicine: Shocking information released! Published on: 26 April 2023, 03:08 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.