1. தோட்டக்கலை

25 கோடி வரை லாபம் தரும் கிழங்கு வகை!

Poonguzhali R
Poonguzhali R
Potatoes Profitable Up to Rs 25 Crore!

நாட்டின் பொருளாதார அடிப்படை என்பது விவசாயத்தை மையமிட்டு இருக்கின்றது.  அந்த விவசாயத்தையே நம்பி தன் வாழ்வாதாரத்தை நடத்தக் கூடிய நிலையில் பலர் உள்ளனர்.  பொதுவாக, விவசாயத்தில் ஒவ்வொரு பயிரை விதைப்பதற்கு என்று ஒவ்வொரு கால நிலை இருக்கின்றது.  அதே போல குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தைப் பெறும் பயிர்களை விளைவிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். 

பொதுவாக உருளைக் கிழங்கு என்பது மாவுச் சத்து நிறைந்த உணவுப் பொருள்.  அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்த நிலையில் உலகில் நான்காவதாக அதிகம் பயிர் செய்யப்படும் செடி உருளை ஆகும்.  இன்றைய நாட்டின் பெரும்பகுதி உருளையின் தாயகம் எனப்படுகிறது. 

கிழங்கு வகைகளில் பல வகைகள் உள்ளன.  அரோட்டுக் கிழங்கு, ஆட்டுக்கால் கிழங்கு, இஞ்சி, இராசவள்ளிக் கிழங்கு, கப்பைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, கருணைக் கிழங்கு, கொய்லாக் கிழங்கு, கொட்டிக் கிழங்கு, கோகிலாக் கிழங்கு, கோசுக் கிழங்கு, சேப்பங் கிழங்கு, சேனைக் கிழங்கு, தாமரைக் கிழங்கு, பனங்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, மாகாளிக் கிழங்கு, மோதவள்ளிக் கிழங்கு, வத்தாளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு முதலான பல வகைகள் இருக்கின்றன.

உருளைக் கிழங்கு வகைகளில் லேடி ரொசெட்டா என்ற சிறப்பு வகை உருளைக் கிழங்கு உள்ளது.  இதனைப் பயிரிடுவதன் மூலம் அதிக லாபத்தைப் பெறலாம்.  இவை பொதுவாக சிப்ஸ்கள், வேஃபர்கள் முதலான பொருட்கள் செய்யப் பயன்படுகின்றன.  இவற்றின் தேவையும் சந்தையில் அதிகமாக உள்ளது.  இந்நிலையில் இது போன்ற தேவை இருக்கின்ற பயிர்களையும், கிழங்குகளையும் பயிரிடுவதன் மூலம் விவசாயத்தில் அதிக லாபத்தினைப் பெறலாம்.

அகமதாபாத்தைச் சேர்ந்த ஜித்தேஷ் படேல் என்ற விவசாயி இந்த லேடி ரொசெட்டா எனும் சிறப்பு வகை கிழங்கினை மட்டுமே தன் தோட்டத்தில் பயிர் செய்து வருகிறார்.  இவர் ஆண்டு ஒன்றுக்கு ரூ.25 கோடி வருவாய் ஈட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   

மேலும் படிக்க...

உருளைக் கிழங்கை நீண்ட நாள் பராமரிக்கும் யுக்திகள்!

உருளைக்கிழங்கை உங்கள் வீட்டு மாடியிலும் வளர்க்கலாம் - சாகுபடிக்கான யுக்திகள்!

English Summary: Potatoes Profitable Up to Rs 25 Crore! Published on: 14 April 2022, 11:34 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.