1. தோட்டக்கலை

மழையால் பீன்ஸ் செடியில் மஞ்சள் கருகல் நோய்- கட்டுப்படுத்த எளிய வழிகள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
To Control insects

Credit: Dinamani

மழைக்காலங்களில் பீன்ஸ் செடியில் மஞ்சள் கருகல் நோய் தாக்கும்போது, சூடாமோனாஸ் ப்ளோரசன்ஸைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பூம்பாறை, வில்பட்டி, மாட்டுப்பட்டி, அட்டுவம்பட்டி, பள்ளங்கி, செண்பகனூர், கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பீன்ஸ் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பீன்ஸ் பயிர் நன்கு வளர்ந்திருந்தது.

மஞ்சள் கருகல் நோய்

ஆனால் இப்பகுதிகளில் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பீன்ஸ் செடி பாத்திகளில் தண்ணீர் தேங்கி, பயிரில் மஞ்சள் கருகல் நோய் தாக்கியுள்ளது.

ஏக்கருக்கு ரூ.25,000 செலவு செய்துள்ள நிலையில், தற்போது மஞ்சள் கருகல் நோய் ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளைக் கவலை அடையச் செய்துள்ளது.

அதேநேரத்தில், தற்போது மிதமான சாரல் மழையுடன் வீசி வரும் பலத்த காற்றையும் பொருட்படுத்தாத விவசாயிகள், பீன்ஸ் செடிகளில் உள்ள களைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சூடோமோனோஸ் ஃப்ளோரசன்ஸ்

இந்த நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து திருவண்ணாமலையைச் சேர்ந்த இயற்கை விவசாயி வெங்கடேஸ்வரன் கூறுகையில், சூடோமேனாஸ் ஃப்ளோரசன்ஸை ஒரு டேங்க்கிற்கு (Tank) 30 முதல் 40 மில்லிகிராம் என்ற வீகிதத்தில் கலந்து பீன்ஸ் செடிகளில் அடித்தால், நோய்க் கட்டுப்படும் என்றார்.

காலை அல்லது மாலை வேளைகளில் ஏதேனும் ஒருமுறை மருந்தைத் தெளித்தால் நல்லப் பலன் அடையலாம் என்றும், அருகில் உள்ள வேளாண் நிலையத்தில் இந்த மருந்தைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் வெங்கடேஸ்வரன் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க...

தொடர் மழையினால் சின்ன வெங்காயம் மகசூல் பாதிப்பு: அழுகுவதைத் தவிர்க்க தேனி விவசாயிகள் கையாளும் புதிய முறை!

பயிர் பாதுகாப்பு மருந்துகளைப் பயன்படுத்துகிறீர்களா? அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!!

English Summary: Beetroot jaundice caused by rain - Details to control the inside!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.