1. தோட்டக்கலை

எந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிடலாம்?

Poonguzhali R
Poonguzhali R
What vegetables should be grown in which month?

தொடர்ந்து ஒரே பயிரைச் சாகுபடி செய்யாமல், மாற்றுப் பயிர்களை விளைவிக்கும்போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகளை எருவாகப் பயன்படுத்தலாம்.  அப்படி பயன்படுத்தினால் முந்தைய பயிரில் தங்கியிருக்கும் நோய்க்கிருமிகள் புதுப்பயிரைத் தாக்காதா என சந்தேகம் எழலாம்ஆனால் உண்மை என்னவெனில் முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகள் அதிகம் புதுப்பயிரைத் தாக்குவது இல்லை.

காய்கறிகள் மனிதர்களுக்கு சரிவிகித உணவு அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு உதவும்  வகையில் பல சத்துக்களைக் கொண்டுள்ளன. உயிர் சத்துக்கள், தாது உப்புக்கள், நார் சத்துக்கள் ஆகியவற்றை வழங்குவதுடன் சக்திக்குத் தேவைப்படும் மாவுச் சத்துக்களையும் அதிகமான அளவில் வழங்குகிறது. எனவே மாதவாரியான உள்நாடு மற்றும் வெளிநாடு சந்தைத் தேவையினை கருத்தில் கொண்டும் பயிர்களைப் பயிரிட வேண்டும்.  அதாவது அதிக லாபம் பெறும் நோக்கத்தில் மாதாந்திர காய்கறிகளின் விலை விவரத்தினை அறிந்தும் பயிரிடுவது அவசியம். 

அந்த வகையில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஏற்ற பயிர்களின் வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

 ஜனவரி (மார்கழி - தை)

கத்தரி, மிளகாய், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி,கீரைகள்.

பிப்ரவரி (தை - மாசி)

கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன்,கீரைகள், கோவைக்காய்.

மார்ச் (மாசி - பங்குனி)

வெண்டை, தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன்.

ஏப்ரல் (பங்குனி - சித்திரை)

கொத்தவரை, வெண்டை

மே (சித்திரை - வைகாசி)

கத்தரி, தக்காளி, கொத்தவரை.

ஜூன்  (வைகாசி - ஆனி)

கத்தரி, தக்காளி, கோவை, பூசணி,கீரைகள், வெண்டை.செடி முருங்கை

ஜூலை (ஆனி -ஆடி)

மிளகாய், சுரை, பூசணி,பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி.

ஆகஸ்ட் (ஆடி - ஆவணி)

முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை..

செப்டம்பர் (ஆவணி - புரட்டாசி)

கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி.

அக்டோபர் (புரட்டாசி - ஐப்பசி)

கத்தரி, முள்ளங்கி.

நவம்பர் (ஐப்பசி - கார்த்திகை)

செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி.

டிசம்பர் (கார்த்திகை - மார்கழி)

கத்தரி, தக்காளி.

மேலும் படிக்க...

கோடைகாலத்தில் பயிரிட உகந்த பயிர்கள் எவை?

கறவை மாடுகளை வளர்க்க விருப்பமா? இதோ உங்களுக்கான கையேடு!!

English Summary: What vegetables should be grown in which month? Published on: 13 April 2022, 09:39 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.