1. செய்திகள்

புத்தாண்டு தினத்தில் சிலிண்டர் விலை குறைப்பு- மாநிலம் வாரியாக விலை நிலவரம்!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Commercial LPG cylinder price

எரிபொருள் விற்பனை நிலையங்கள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எல்பிஜி சிலிண்டர்களின் விலையை மாற்றியமைக்கும் நிலையில், புத்தாண்டு தினமான இன்று முதல் (ஜன.1) வணிக ரீதியான சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் வணிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 19 கிலோ கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டரின் புதிய விலையை வெளியிட்டுள்ளது. புதிய விலைகள் புத்தாண்டின் முதல் நாளான இன்று (ஜனவரி 1) முதல் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.4.50 வரை குறைந்துள்ளது.

அதே நேரத்தில் வீடுகளில் பயன்படுத்தப்படும் உள்நாட்டு 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது தவிர, விமானங்களில் பயன்படுத்தப்படும் ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் (ஏடிஎஃப் எரிபொருள்) விலையிலும் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விலை மாற்றத்தின் அடிப்படையில் முக்கிய நகரங்களில் விற்கப்படும் சிலிண்டரின் விலை பின்வருமாறு-

வர்த்தக கேஸ் சிலிண்டர் விலையில் ஒவ்வொரு நகரிலும் சிறிது சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று முதல் டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டரின் விலை ரூ.1755.50 ஆக உள்ளது. முன்பு ரூ.1757-க்கு வந்து விற்கப்பட்டது. மும்பையில் ரூ.1710-க்கு கிடைத்த இந்த சிலிண்டர் தற்போது ரூ.1708.50 ஆக குறைந்துள்ளது. சென்னையில் வணிக காஸ் சிலிண்டர் விலை ரூ.1929-ல் இருந்து ரூ.1924.50 ஆக குறைந்துள்ளது. ஆனால், கொல்கத்தாவில் மட்டும் கேஸ் சிலிண்டர் தற்போது ரூ.1868.50க்கு பதிலாக ரூ.1869க்கு கிடைக்கிறது.

விமான எரிபொருளின் விலையில் மாற்றம்:

ஜனவரி 1, 2024 முதல் விமான நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் ஏவியேஷன் டர்பைன் எரிபொருளின் (ATF விலை) விலையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்போது டெல்லியில் ATF இன் புதிய விலை ரூ.1,01,993.17/Kl ஆக உள்ளது. இந்த விலை கொல்கத்தாவில் ரூ.1,10,962.83/Kl ஆகவும், மும்பையில் ரூ.95,372.43/Kl ஆகவும், சென்னையில் ரூ.1,06,042.99/Kl ஆகவும் உள்ளது.

Read more: SSY சிறுசேமிப்புத் திட்டம்: பெண் குழந்தை வைத்திருப்பவர்களுக்கு குட்நியூஸ்!

உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலை என்ன?

14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதன் விலை கடைசியாக ஆகஸ்ட் 30, 2023 அன்று மாற்றப்பட்டது. உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர் விலையானது டெல்லியில் ரூ.903-க்கும், கொல்கத்தாவில் ரூ.929-க்கும், மும்பையில் ரூ.902-க்கும், சென்னையில் ரூ.918.50-க்கும் கிடைக்கிறது.

மாநில அரசு விதிக்கும் வரிகள் காரணமாக உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலைகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாறுபடுகிறது. விலை நிர்ணயம் அந்நிய செலாவணி விகிதங்கள், கச்சா எண்ணெய் விலை போன்ற பல காரணிகளைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் குறிப்பிடுகின்றனர்.

Read more: விவசாயத்துடன் அலங்கார மீன் வளர்ப்பில் அசத்தும் தூத்துக்குடி சரவணன்!

English Summary: 19 kg Commercial LPG cylinder price cut on New Year Day Published on: 01 January 2024, 11:03 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.