Krishi Jagran Tamil
Menu Close Menu

இன்று அட்சய திருதியை நன்னாள்: 6 மணிக்கே நகை கடைகள் திறப்பு: சிறந்த தள்ளுபடி மற்றும் சலுகைகள்: புதிய நகை வாங்க மக்களின் ஆர்வம்

Tuesday, 07 May 2019 12:01 PM

இன்று அட்சய திருதியை நன்னாள். இந்த நாளில் மக்கள் தங்கள் வீடுகளில் பூஜை செய்தும் புதிய நகை வாங்கியும் நாளை கொண்டாடுவர். பழங்கள், இனிப்பு, பலகாரம், பால், உப்பு, தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வைத்து பூஜை செய்து வழிபடுவர். மேலும் காலம் காலமாக அட்சய திருதியை நாளில் நகை வாங்குவதை ஒரு நம்பிக்கையான கலாச்சாரமாக மக்கள் கடை பிடித்து வருகின்றனர். இந்நாளில் நகை வாங்கினால் வீட்டில் செல்வம் சேரும் என்பது தமிழர்களின் பாரம்பரிய நம்பிக்கை மற்றும் கலாச்சாரமாகும்.

அட்சய திருதியை நாளையொட்டி அணைத்து நகை கடைகளிலும் சிறப்பு தள்ளுபடி, சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்தே இன்னலுக்கான சிறப்பு தள்ளுபடி, சலுகைகள்  தொடர்பான  விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.பெண்கள், ஆண்கள், குழந்தைகள், அனைவரையும் கவரும் வண்ணம் புதிய புதிய மாடல்களில், டிசைன்களில் நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பொதுவாகவே நகை கடைகள் பார்க்க அழகாக இருக்கும், மற்றும் சிறப்பு நாளான இன்று மேலும் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் மின் விளக்குகள், பூக்கள் கொண்டு கடைகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் காலை 6 மணிக்கே கடைகளை திறக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் வழக்கமான நாட்களை விட அட்சய திருதியை நன் நாளான இன்று 4 மடங்கு வியாபாரம் அதிகரிக்க நகை வியாபாரிகள் இலக்கு நியமித்துள்ளார். பெண்களை கவரும் வண்ணம் அதிகமான மாடல்கள், டிசைன்களில் லைட் வெயிட், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆறாம், நெக்லஸ், டாலர், பிரேஸ்லட், செயின், மோதிரம், வளையல், மேலும் பல நகைகள் புது புது டிசைன்களில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வண்ணம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன..  

அட்சய திருதியை நன்னாளில் மக்கள் தங்கள் வீடுகளில் பால் மற்றும் உப்பு வாங்குவது மிகவும் சிறப்பானது.அனைவரும் இந்த நன்னாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வாழ்த்துக்கள்........

2109 akshaya tritiya benefits of akshaya tritiya poojas and singificanse
English Summary: 2019 Akshaya tritiya: pooja festive: how people celebrate

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. Shock Report : பெங்களூரு ஏரி அருகே விளைந்த காய்கறிகளில் விஷம்! - அதிகரிக்கும் உலோகங்கள்!
  2. Aadhar Linking : ஆதார் - மொபைல் எண் இணைப்புக்கு ஆவணங்கள் எதுவும் தேவையில்லை!!!
  3. வன்முறையில் முடிந்த டிராக்டர் பேரணி! - விரைவில் அடுத்தகட்ட ஆலோசனை முடிவு - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!!
  4. பயிர்கள் சேதமடைந்து நஷ்டமடைந்த போதிலும், மாடுகளுக்கு தீவனம் அளிக்க அறுவடை செய்யும் விவசாயிகள்!
  5. டில்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி! அமைதியாக நடந்த விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை! 144 தடை உத்தரவு
  6. கூண்டு முறையில் நாட்டுக்கோழி வளர்த்தால், கூடுதல் இலாபம்!
  7. கோழிக்கறி சமைக்கப்போறீங்களா? இதப்படிங்க முதலில்!
  8. 105 வயதிலும் விவசாயத்தில் அசத்தும் நம்ம ஊர் பாட்டி "பாப்பம்மாள்"-க்கு பத்மஸ்ரீ விருது!
  9. தடுப்புகளை உடைத்தெரிந்து டெல்லிக்குள் நுழைந்து தொடங்கியது விவசாயிகள் பேரணி!
  10. லட்சத்தில் சம்பாதிக்க வேண்டுமா..? இதோ உங்களுக்கான சிறந்த தொழில் ஐடியா!!

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.