1. செய்திகள்

பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது: 95 % மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி: 2634 பள்ளிகள் 100% தேர்ச்சி

KJ Staff
KJ Staff

தமிழகத்தில் பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள் சற்று முன்பு வெளியானது. சமசீர் கல்வி முறையின் அடிப்படையில் தேர்வெழுதிய 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர்களின் தேர்வு முடிவுகள் வெளியிட பட்டுள்ளது. கடந்தாண்டை விட இவ்வாண்டு தேர்வு  முடிவுகள்  23 நாட்கள் முன்பாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.09:30 மணியளவில் முடிவுகள் வெளியானது. இந்தாண்டு தேர்ச்சி விகிதமானது 95% ஆக உயர்த்துள்ளது. 

தமிழகத்தில் பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு கடந்த மாதம் மார்ச் 6 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை  மாநிலம் முழுவதிலுமிருந்து மொத்தம் 8, 21, 659  மாணவ, மாணவியர்கள்  தேர்வு எழுதி இருந்தனர். இதில் மாணவியர்கள் 96.50%, மாணவர்கள் 93.3% பேர் தேர்சசி அடைத்துள்ளனர்.  தேர்சசி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 2634 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.

தேர்வு முடிவுகளை எவ்வாறு தெரிந்து கொள்வது ?

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

 tnresults.nic.in,  

 http://dge.tn.nic.in/ 

https://www.dge1.tn.nic.in/

http://www.dge2.tn.nic.in/ 

மேலும் மாணவர்களுக்கு பதிவு செய்யப்பட்ட  கைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள்  குறுச்செய்தியாக அனுப்பிவைக்கப்படும்.

மேலும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவல் மையத்தினுள்ளும் மற்றும் மாவட்ட நூலகங்களிலும் மாணவர்கள் கட்டணம் ஏதுமின்றி இலவசமாக தெரிந்து கொள்ளலாம் என கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

விடைத்தாள் நகல் பெற விரும்புவோர் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  வருகிற 10, 11-ந் தேதி மற்றும் 13-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகலுக்கு ஒரு பாடத்துக்கு 275 ரூபாயும் , மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு 305 ரூபாயும் மற்ற பாடங்களுக்கு 205  ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்கள் பணமாக செலுத்துபடி அறிவுறுத்த பட்டுள்ளார்.

English Summary: Tamil Nadu Plus Results Declared: 95% Students Are Passed: 2634 Schools Scored Centum

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.