1. செய்திகள்

நீட் தேர்வு 2019: கடுமையான சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்: 3மணி நேரம் வெயிலில் வாடிய பெற்றோர்கள்

KJ Staff
KJ Staff

நேற்று நடைபெற்ற 2019ஆம் ஆண்டின் நீட்தேர்வு தமிழகத்தின் 14 நகரங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், கடலூர், கரூர், மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி,வேலூர், நாகர்கோவில், ஆகிய நகரங்களில் 188 மையங்களில் தேர்வு நடை பெற்றது. இதில் 1 லட்சத்து 34ஆயிரம் பேரில் 1லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேலான மாணவர்கள் தேர்வு எழுதினார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் நாடு முழுவதும் 154 நகரங்களில் 3,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடை பெற்றது. 15 லட்சத்து 19 ஆயிரம் பேரில் 90  சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

தேர்வு பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது. தேர்வு மையங்கள் பிற்பகல் 12 மணிக்கே திறக்கப்பட்டன, இதனால் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் காலையில் இருந்தே தேர்வு மையத்திற்கு வர தொடங்கினார்கள். நீண்ட நேரம்  வரிசையில் நின்ற மாணவர்கள் கடுமையான சோதனைக்கு பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். கைகளால் மற்றும் மெட்டல் டிடெக்ட்ராலும் சோதனை செய்யப்பட்டனர். மாணவர்கள் அணிந்திருந்த முழுகை சட்டைகளை அறை கையாக கிழித்து, அவர்களது மணிபர்ஸுகள், கை கடிகாரங்கள், அனைத்தையும் கடுமையாக சோதித்த பிறகே அனுமதிக்கப்பட்டார்கள்.

பின் மாணவிகள் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி, கொலுசு, துப்பட்டா, அனைத்தும் அகற்றப்பட்டன, மற்றும் மாணவிகளின் தலை முடிகளை களைத்து, தலையில் அணிந்திருந்த கிளிப், ஹேர்பேண்ட் கலட்டப்பட்டு பெற்றோர்களிடம் கொடுக்கப்பட்டது. இத்தனை கடுமையான சோதனைக்குப் பிறகே மாணவர்கள் அனைவரும் தேர்வு மையத்துக்குள் அனுப்பப் பட்டார்கள். ஆதார் அட்டை கொண்டு வராதவர்களையும், தாமதமாக வந்த மாணவர்களையும் தேர்வு எழுத அனுமதிக்க வில்லை.

3 மணி நேரம் வெயிலில் வாடிய பெற்றோர்கள். தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக தேர்வு மையத்திற்கு வெளியில் காத்திருந்தார்கள். தேர்வு பிற்பகலில் நடைபெற்றதால் கடும் வெயிலில் வீதியில் அமர்ந்திருந்தனர். பெற்றோர்கள் காத்திருக்க எந்த வித வசதியும் செய்யப்படவில்லை. இந்த நிலையை பெற்றோர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.  

English Summary: NEET 2019: TAMILNADU: students were severely checked before allowed to exam hall

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.