
Announcement of the work of drilling water tanks in Tamil Nadu!
தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம், 461 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மாநிலம் முழுவதும் உள்ள 341 குளங்கள், 67 அணைக்கட்டுகள், 11 கால்வாய்களை சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கும். திட்ட நிதியில் 70% உலக வங்கி கடனாக வழங்கும், மீதமுள்ள 30% மாநில அரசு ஏற்கும்.
இத்திட்டத்தின் கீழ் பாலாறு, செய்யாறு காவிரி, பெரியாறு மற்றும் பிற ஆற்றுப்படுகைகளின் கீழ் உள்ள குளங்கள் மற்றும் அணைக்கட்டுகள் சீரமைக்கப்படும் என நீர்வளத்துறை அறிவிப்பு தெரிவித்துள்ளது. விரிவான திட்ட அறிக்கையைச் சமர்ப்பித்த பின், பணிக்கான அரசாணை வெளியிடப்பட்டது.
நீர்வளத்துறை (WRD) பணியை ஓரிரு கட்டங்களில் நிறைவேற்றும் என்று உயர் அதிகாரி கூறியுள்ளார். முதற்கட்டமாகக் காவிரி மற்றும் செய்யாறு படுகையில் உள்ள சில குளங்கள், அணைகள் சீரமைக்க அடையாளம் காணப்பட்டுள்ளன. WRD மத்திய நீர்வள ஆணையத்தின் மூலம் நிதிக்கான முன்மொழிவை உலக வங்கிக்கு அனுப்பியுள்ளது. நிதி கிடைத்ததும் பணிகள் துவங்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த முயற்சியை, காவிரி டெல்டா விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன் வரவேற்றுள்ளார். அதோடு, அதிக தண்ணீரைச் சேமிக்க உதவும் சிறிய தடுப்பணைகளைக் கட்டுவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பாசனத்திற்காக அடையாளம் காணப்பட்ட தொட்டிகள் எளிதாக நீர் பாய்ச்சுவதற்காக மேல் பகுதியிலிருந்து கீழ் பகுதி வரை தூர்வாரப்படும். "காவிரி பகுதியில், மேட்டூர் அணையில் இருந்து 7 அடி வரை மணல் அள்ளப்பட வேண்டும், மேலும் அனைத்து விவசாயிகளுக்கும் நீர் வழங்குவதை உறுதி செய்ய பாசனக் கால்வாய்களைச் சுத்தம் செய்து அதன் முனை வரை அகலப்படுத்த வேண்டும்" என்று இளங்கீரன் கூறியுள்ளார்.
மேலும் படிக்க
Share your comments