1. செய்திகள்

பாசனத்திற்காக பாவனிசாகர், அழியாறு அணைகள் திறப்பு!

Daisy Rose Mary
Daisy Rose Mary

பவானிசாகர் அணை (Bhavani Sagar Dam)

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால் பகுதியில் உள்ள பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, கடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு 7,776 மி.கன அடி தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டிருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

தற்போது தொடர்ந்து தண்ணீர் திறந்து விடுமாறு கொடிவேரி விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்ததைத் தொடர்ந்து, பவானிசாகர் அணையிலிருந்து 6.6.2020 இன்று முதல், வரும் 15-ம் தேதி முடிய 10 நாட்களில் 7 நாட்கள் மட்டும் பாசனத்திற்கு நீர் விநியோகம் செய்தும், 3 நாட்கள் இடைநிறுத்தம் செய்தும், 241.92 மில்லியன் கன அடி தண்ணீரைத் திறந்துவிட ஆணையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதனால், ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி மற்றும் அந்தியூர் வட்டடங்களில் உள்ள 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும், மேலும், விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்வதாகவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Credit by : The Hindu

ஆழியாறு அணை (Aliyar Dam)

இதேபோன்று அவர் விடுத்துள்ள மற்றொரு அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு பழைய ஆயக்கட்டு ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கோரி ஆனைமலை வட்டார ஆழியாறு பழைய ஆயக்கட்டு விவசாயிகள் நலச் சங்கம் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு 5 பழைய வாய்க்கால்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் முதல்போக பாசனத்திற்கு 7.0.2020(நாளை) முதல் வரும் டிசம்பர் 31ம் தேதி முடிய 146 நாட்களுக்கு, தற்போதைய நீர் இருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்தினைப் பொறுத்து, ஆழியாறு அணையிலிருந்து 1,156 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இதனால் கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை வட்டத்தில் உள்ள 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், காவேரி டெல்டா பாசனத்திற்காக வரும் 12ம் தேதி சேலம் மாவட்டம் மேட்டூர் அணையும், கன்னியாகுமரி மாவட்ட பாசனத்திற்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகிய அணைகளையும் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்குத் தண்ணீர் திறப்பு : முதல்வர் உத்தரவு

விவசாயிகளுக்கு உதவ ரூ.71.21 கோடிக்கு வட்டியில்லா பயிர் கடன் : வேளாண்மை இயக்குனர்!

பாம்பாறு பாசன விவசாயிகளுக்கு முழு மானியத்தில் விவசாய இடுபொருள்கள்!

English Summary: TN CM issue the order to open Bhavani Sagar dam and Aliyar dam to cultivation

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.