1. செய்திகள்

தேர்வில் நூற்றுக்கு நூறா? மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் காத்திருக்கு பரிசு.. விவரம் உள்ளே

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Cash prize of Rs.10K each to the students who score centum in any subject at plus2

இன்று தாக்கல் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டில், சென்னையிலுள்ள பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100/100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, தலா ரூ.10,000/- வீதம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவை:

சென்னைப் பள்ளிகளில் இசை ஆசிரியர்கள் உள்ள 20 பள்ளிகளுக்கு ஸ்ருதி பெட்டி (Manual), மின்கலன்களால் இயக்கப்படும் ஸ்ருதி பெட்டி (Electronic), ஆர்மோனியம், தாளம் மற்றும் மராக்கஸ் குச்சிகள் (Maracas) போன்ற இசைக்கருவிகள் ஒரு பள்ளிக்கு ரூ.25,000/- வீதம் 20 பள்ளிகளுக்கு ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும். அனைத்து சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் தானியங்கி மணி ரூ.27.17 இலட்சம் மதிப்பீட்டில் அமைத்து தரப்படும் என மேயர் பிரியா தெரிவித்தார்.

சென்னை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே கற்றல்/கற்பித்தல் செயல்முறைகள் மட்டுமின்றி நமது நாட்டின் பாராளுமன்ற நடைமுறைகளை அறிவதோடு, பிற நாடுகளின் பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளவும், தீர்வுகளைக் கண்டறியவும், பன்னாட்டு கலாச்சாரங்கள், கல்விமுறை, சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பற்றி நமது மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு பள்ளிகளில் மாதிரி ஐக்கிய நாடு (MUN) குழு அமைக்கப்படும்.

திருக்குறளுடன் அதற்கான விளக்கமும் நாள்தோறும் காலை இறைவணக்கக் கூட்டத்தில் மாணவர்களை கூறவைத்து தமிழ் பேசும் திறனை மேம்படுத்த இந்த கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

100 சதவீத தேர்ச்சி- ஆசிரியர்களுக்கு கல்விச்சுற்றுலா:

10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் 100% தேர்ச்சி ஏற்படுத்தும் ஆசிரியர்களுக்கு, இதுவரை ரூ.1,500/- ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. 2023-2024-ஆம் கல்வியாண்டில் ஊக்கத்தொகை ரூ.3,000/-ஆக உயர்த்தி வழங்கப்படும். அதிகபட்சம் 400 ஆசிரியர்களுக்கு ரூ.12 இலட்சம் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். ஆசிரியர்கள் விரும்பும் எந்த Massive Open Online Course (MOOC)-ஐப் பெறுவதற்கும் உதவித் தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.20 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி ஏற்படுத்திய ஆசிரியர்களை விடுமுறை நாட்களில்,கல்விச் சுற்றுலாவாக நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனங்களுக்கு (எ.கா: ஐஐடி-மெட்ராஸ்,ஐஐஎம்-பெங்களூர்,டெல்லி பல்கலைக்கழகம்) அழைத்துச் செல்லப்படுவர். இதற்காக ரூ.20 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

2023-2024ஆம் கல்வியாண்டில் சென்னைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100/100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, தலா ரூ.10,000/- வீதம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இத்திட்டம் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.  இது தொடர்பாக தனியே வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும்.

சென்னைப் பள்ளிகளில் பயின்று மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்று Joint Entrance Exam (JEE), Common Law Admission Test (CLAT), National Institute of Fashion Technology (NIFT) மற்றும் National Eligibility cum Entrance Test (NEET) போன்ற தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று, அதன் மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரசு கல்வி நிறுவனங்களில் மட்டும் (எ.கா. IIT, National Law School of India University – Bangalore, AIIMS and MMC) சேரும் மாணவர்களுக்கு அவர்களின் முதலாம் ஆண்டு கல்விக் கட்டணம் (Tuition Fee) மட்டும் பெருநகர சென்னை மாநகராட்சியால் 2023-2024ஆம் நிதியாண்டு முதல் வழங்கப்படும். இது தொடர்பாக தனியே வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும்.

அனைத்து தொடக்க,நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்துப் சென்னைப் பள்ளிகளுக்கும் ரூ.6.27இலட்சம் செலவில் முதலுதவி பெட்டிகள் வழங்கப்படும். 2023-2024ஆம் கல்வியாண்டில் சென்னை மாநகர பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் கணினி ஆய்வகங்களில் ரூ.5 இலட்சம் செலவில் தீயணைப்பான் கருவிகள் (Fire Extinguisher) பொருத்தப்படும்.

பள்ளிகளில் பெற்றோர்களுக்கான நோக்குநிலைத் (orientation) திட்டம் :

தற்சமயம் School Management Committee (SMC) கூட்டங்களின் போது (மாதத்திற்கு ஒருமுறை) பெற்றோர்கள் பள்ளிகளுக்கு அழைக்கப்பட்டு, மாணவர்களின் கற்றல் நிலை மற்றும் பள்ளிகளின் கல்வி மேம்பாடுத் திட்டம் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

2023-2024ஆம் கல்வியாண்டில், ஆண்டுக்கு ஒருமுறை கல்வி மேம்பாடு குறித்த சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சியையும், SMC கூட்டத்தின் போது இணைத்து செயல்படுத்தப்படும் எனவும் பட்ஜெட் தாக்கலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண்க:

10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ்- மேயர் பிரியா அறிவிப்பு

English Summary: Cash prize of Rs.10K each to the students who score centum in any subject at plus2 Published on: 27 March 2023, 02:22 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.