1. செய்திகள்

பேரிடர் நிவாரண நிதி - தமிழகத்திற்கு ரூ.286.91 கோடி வழங்க மத்திய அரசு அனுமதி!

Daisy Rose Mary
Daisy Rose Mary

கடந்த ஆண்டில் பேரிடர் பாதித்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் தமிழகத்திற்கு 286.91 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம், புயல், வெட்டுக்கிளி தாக்குதலால் என பல்வேறு இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மத்தியபிரதேசம், பீகார், தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிதியாக ரூ.3113.15 கோடி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு ரூ.286.91 கோடி

நிவர் மற்றும் புரவி புயல்களால் அடுத்தடுத்து பாதிப்படைந்த தமிழகத்துக்கு 286.91 கோடி ரூபாயும், நிவர் புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரிக்கு 9.91 கோடி ரூபாயும் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

பெரு வெள்ளத்தால் கடும் பாதிப்படைந்த பீகாருக்கு ரூ.1,255.27 கோடியும், தென்மேற்கு பருவமழை காரணமாக வெள்ளப்பெருக்கை எதிர்கொண்ட ஆந்திரபிரதேச மாநிலத்துக்கு 280.78 கோடி ரூபாயும் நிதி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

வெட்டுகிளி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேசத்துக்கு 1280.18 கோடி ரூபாய் நிதி வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2020-21 நிதியாண்டில் 19,036.43 கோடி ரூபாய் மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 28 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும், தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 4,409.71 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க...

தமிழக அரசின் 12000 கோடி வேளாண் கடன் தள்ளுபடி!- வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன? விவசாயிகளே உங்கள் கடன்கள் தள்ளுபடியாகுமா?

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்கும்! - அனுராக்தாகூர்

‘இனிப்பு புரட்சி’-யில் இலக்கை எட்டவிருக்கும் தேசிய தேனீவளர்ப்பு & தேன் இயக்கம்!!

வீட்டுத் தோட்டம் அமைக்க சொட்டு நீர் உபகரணங்களுக்கு மானியம்! அனைவருக்கும் அழைப்பு!!

English Summary: Centre approves Rs 3,113 crore for 5 states as disaster relief, Tamilnadu to get 286.91 crore

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.