1. செய்திகள்

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்கும்! - அனுராக்தாகூர்

Daisy Rose Mary
Daisy Rose Mary
Farmers protest

அரசியலுக்காக விவசாயிகளை எதிர்கட்சிகள் பயன்படுத்துவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் குற்றம்சாடினார். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் கடின முயற்சியில் பாஜக இறங்கியுள்ளதாக தெரிவித்த அவர், புதிய வேளாண் சட்டங்களால் அதை செயல்படுத்த முடியும் என்றார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், எதிர்கட்சிகள் வேளாண் சட்டங்களை கருப்பு சட்டங்கள் என்று சொல்கிறார்கள். யாருடைய சிந்தனைகள் கருப்பாக இருக்கிறதோ, அவர்கள்தான் இவற்றை கருப்பு சட்டங்கள் என்று சொல்கிறார்கள் என்றார். 

வருமானம் இருமடங்காகும்

புதிய வேளாண் சட்டத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலை முறை முடிவுக்கு வந்து விடும் என்று எங்கே எழுதப்பட்டுள்ளது? கண்பிக்க முடியுமா என்று எதிர்கட்சிகளிடம் கேள்வி எழுப்பினார். அற்ப அரசியலுக்காக இந்த ஏழை எளிய விவசாயிகளை எதிர்கட்சிகள் பயன்படுத்தவதாகவும் குற்றம்சாட்டினார். விவசாயிகள் வருமானத்தை இரு மடங்காக்கும் கடினமான வேலையை பாஜக கையில் எடுத்துள்ளது. இந்த புதிய சட்டங்களால் அதை செயல்படுத்த முடியும் என்றார்.

வேளாண் கட்டமைப்பு

முந்தைய அரசை விட பாஜக அரசில் வேளாண் உற்பத்தி பொருட்கள் கொள்முதல் அதிகரித்து இருக்கிறது. வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கத்தான் மத்திய பட்ஜெட்டில் வேளாண்மை செஸ் (கூடுதல் வரி) விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் அழுகிப் போகும் பொருட்களுக்கு வேளாண் கட்டமைப்பு தேவைப்படுகிறது. இதை ஏன் கடந்த 65 ஆண்டுகளில் எதிர்கட்சிகளால் கொண்டு வரவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

குறைந்த பணவீக்கம்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பணவீக்கம் 11, 12 சதவீதமாக இருந்தது. இப்போது அது 4 சதவீதமாக குறைந்துள்ளது. நிதிப்பற்றாக்குறை 5, 6 சதவீதமாக இருந்தது. இப்போது அது 3.5 சதவீதத்துக்கும் குறைவாக வந்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க...

‘இனிப்பு புரட்சி’-யில் இலக்கை எட்டவிருக்கும் தேசிய தேனீவளர்ப்பு & தேன் இயக்கம்!!

வீட்டுத் தோட்டம் அமைக்க சொட்டு நீர் உபகரணங்களுக்கு மானியம்! அனைவருக்கும் அழைப்பு!!

மரவள்ளி கிழங்கிலிருந்து மதிப்புக்கூட்டு பொருள் தாயரிப்பு! - விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி!!

English Summary: New agricultural laws will double farmers' incomes says union minister Anurag Thakur

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.