1. செய்திகள்

சென்னை மக்களே மாற்றத்துக்கு தயார் ஆகுங்க- அரசின் பலே திட்டம்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Chennai Climate Action Plan Manual released by MK stalin

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளை 100% மின்மயமாக்குதல் மற்றும் தனியார் வாகனங்களின் மின்மயமாக்கலை ஊக்குவிக்கும் இலக்குகளுடன் கூடிய சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் சென்னை காலநிலை செயல் திட்ட கையேட்டினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு அரசுகளின் குழு (ஐபிசிசி) கடல் மட்ட உயர்வு, கடுமையான அதிக வெப்பநிலை மற்றும் சென்னை போன்ற கடலோர நகரங்களுக்கு காலநிலை பாதிப்புகளால் ஏற்படும் அபாயங்கள் ஆகியவற்றால் கடுமையான சேதங்கள் வரவிருப்பருதாக எச்சரித்துள்ளது.

சென்னை காலநிலை செயல் திட்டம் நோக்கம் என்ன?

இத்திட்டமானது C40 நகரங்கள் ஆதரவுடன், அகமதாபாத்தில் உள்ள நகர்ப்புற மேலாண்மை மையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது. இச்செயல்திட்டமானது கார்பன் உமிழ்வை குறைக்கும் நோக்கமான 2018-19 உமிழ்வு அளவுகளுடன் ஒப்பிடுகையில், 2030 ஆம் ஆண்டில் 1% அதிகரிப்பு, 2040 இல் 40% குறைதல் மற்றும் 2050 ஆம் ஆண்டில் நிகர பூஜ்ஜியத்தை அடைவற்கான, பாரிஸ் காலநிலை ஒப்பந்தங்களுடன் ஒத்துப்போகிறது. இத்திட்டம் ஆறு முன்னுரிமை பகுதிகளில் நடவடிக்கை மேற்கொள்ள கவனம் செலுத்துகிறது.

மின் தொகுப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Electrical grid and renewable energy):

சென்னை அதன் காலநிலை செயல்திட்டத்தின் மூலம் 2050 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தில் இருந்து 93% மின்சாரத்தை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது.

வணிக கட்டடங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலை கட்டமைத்தல் (Building energy):

2050 ஆம் ஆண்டுக்குள் சென்னையின் 100% வணிகக் கட்டடங்களில் அதிக திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலை பயன்படுத்துவதை இலக்காகக் கொண்டு செயல்படும்.

நிலையான போக்குவரத்து (Sustainable transport):

சென்னையில் 2050 ஆம் ஆண்டுக்குள், நிலையான போக்குவரத்து இயக்கத்ததை ஊக்குவிப்பதற்கு 80% நகர உட்போக்குவரத்தை பொதுபோக்குவரத்து மூலம் அடையவும், நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதலை ஊக்குவிக்கவும், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளை 100% மின்மயமாக்குதல் மற்றும் தனியார் வாகனங்களின் மின்மயமாக்கலை ஊக்குவிக்கும் இலக்குகளுடன் செயல்படும்.

திடக்கழிவு மேலாண்மை (Solid waste management):

சென்னை நகரின் திடக்கழிவுகளை 100% மேலாண்மை செய்யக்கக்கூடிய திறமையான, பயனுள்ள மற்றும் மீள்திறன் கொண்ட கழிவு மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும்.

நகர்ப்புற வெள்ளம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை (Urban flooding and water scarcity):

சென்னையை "தண்ணீர்-செயல்திறன்" மிக்க நகரமாக மாறுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, 2050 ஆம் ஆண்டுக்குள் நகரத்தின் 35% பகுதியில் நகர்ப்புற இயற்கையை விரிவுபடுத்தும் நோக்கம் செயல்படுத்தப்படும்.

பாதிப்புக்குள்ளாகக்கூடிய பிரிவினர் மற்றும் சுகாதாரம் (Vulnerable populations and health):

சென்னையில் வெள்ள அபாய மண்டலங்களுக்குள் வசிக்கும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் மறுவாழ்வு, வெப்பத்தைத் தாங்கும் திறன் மற்றும் பரவலாக்கப்பட்ட சுகாதார உள்கட்டமைப்பிற்காக தற்போதுள்ள குடிசை வீடுகளை மறுசீரமைத்தல் ஆகியவற்றால் "அனைவருக்கும் அழிவில்லாத காலநிலை" ஆதாரத்தை நோக்கி சென்னை நகரம் செயல்படும்.

இந்நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. உட்பட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

மேலும் காண்க:

தினை ஐஸ்கிரீம்- காப்புரிமை மூலம் வருவாய் ஈட்டும் அரசு கல்லூரி!

English Summary: Chennai Climate Action Plan Manual released by MK stalin Published on: 13 June 2023, 03:18 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.