1. செய்திகள்

பயிர் காப்பிட்டு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கினார் முதல்வர்

Yuvanesh Sathappan
Yuvanesh Sathappan
todays news

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று தலைமை செயலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், பயிர் காப்பிட்டு திட்டத்தின் கீழ் 2021-2022 மற்றும் 2022-023 ஆம் ஆண்டுக்களுக்கு மொத்தம் 2.21 லட்சம் விவசாயிகளுக்கு 318.30 கோடி ருபாய் இழப்பீடு தொகை வழங்கும் பணியினை தொடங்கி வைப்பதன் அடையாளமாக ஐந்து விவசாயிகளுக்கு ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார் ,இதில் வேளாண் அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.

2,ரேஷன் கடையில் பாரம்பரிய அரிசி வழங்க வேண்டும்: விவசாயிகள் வேண்டுகோள்!

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக பாரம்பரிய அரிசி ரகங்களை வழங்க வேண்டும் என்றும் உணவுத்துறை அமைச்சர் மற்றும் உணவுத்துறை செயலாளர் ஆகியோரை நேரில் சந்தித்து மனு வழங்கிய விவசாயிகள் மன்றாடி கேட்டுக் கொண்டுள்ளனர்.

3,எண்ணெய் வகைகள் திடீர் விலை உயர்வு!

விருதுநகர் மார்க்கெட்டில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி, இந்தவாரம் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் கடலை எண்ணெய், நல்லெண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, விருதுநகர் மார்க்கெட்டில் கடலை எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.30 விலை உயர்ந்து ரூ.3,030 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.330 விலை உயர்ந்து ரூ.6,270 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.1,580 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500 ஆகவும் விற்பனையாகிறது.

4,தங்கம் விலை ரூ.1,040 அதிகரிப்பு- ரூ.42ஆயிரத்தைத் தாண்டிய சவரன்!

நாளுக்கு நாள் ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று ரூ.42,080 யைத் தாண்டி புதிய உச்சம் அடைந்துள்ளது. இதனால் திருமண ஏற்பாடு செய்திருப்பவர்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர்கள்  அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலையில் தொடரும் அதிகரிப்பு, அதனை நடுத்தரவாசிகளுக்கு எட்டாக்கனியாகவே மாற்றிவிடுகிறது. அந்த வகையில் ஒரு கிராம் தங்கம் விலை நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் புதிய உச்சத்தை எட்டியிருப்பது, இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

5,பொங்கல் பண்டிகை: மண் பானை உற்பத்தி வளர்ச்சி!

பொங்கல் பண்டிகையில் அரிசி, வெல்லம், நெய் சேர்த்து பானையிலிட்டு பொங்கல் வைத்து சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து விமா்சியைாக கொண்டாடுவது தமிழா்களின் மரபாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு சில நாள்களே உள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே உள்ள பாறைப்பட்டியில் பொங்கல் வைக்க பயன்படுத்தப்படும் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி அதிகமாக நடைபெற்று வருகின்றது.

மண்ணிலிருந்து பதப்படுத்தி பானை தயாரித்து வண்ணம் தீட்டி விற்பனைக்காகவும் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் கரூர், தேனி, ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களுக்கும், கேரளா முதலான வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைப்பது வழக்கம். இது மண்பாண்டம் செய்பவர்களின் வாழ்வாதாரமாகவும் இருக்கிறது.

6,தொடங்கப்பட்டது ஜல்லிக்கட்டு முன்பதிவு

மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 15ல் அவனியாபுரத்திலும், 16ல் பாலமேட்டிலும், 17ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு முன் பதிவை இன்று பகல் 12 மணி முதல் 12ம் தேதி மாலை 5 மணி வரை madurai.nic.in என்ற இணைய தளத்தில் பதிவுசெய்து வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மதுரையில் இன்று 12 மணி முதல் முன் பதிவு மேற்கொள்ளும் பணிகள் ஆர்வமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் முன் பதிவு செய்வதற்கு எதெல்லாம் கட்டாயம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில், காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான புகைப்படம் மற்றும் ஆவணங்களுடன் முன்பதிவு செய்ய வேண்டும். ஜல்லிகட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதோடு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை அவசியமாகும்.

ஜல்லிகட்டில் பங்கேற்கும் காளைகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 ஜல்லிகட்டில் எதாவது ஒரு ஜல்லிகட்டில் மட்டுமே பங்கேற்க முடியும். ஜல்லிகட்டு காளையை அழைத்து வரும் காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதோடு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை அவசியம் செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7,தாட்க்கோ அளிக்கும்  ட்ரொன் பயிற்சி

தாட்க்கோ மூலம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணாக்கர்களுக்கு மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்டர் போர் ஏரோஸ்பாஸ் ரெசெர்ச் மூலமாக விவசாயத்துறையில் பயன்படுத்தும் ட்ரொன் கருவி பயிற்சியினை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் அவர்கள் தகவல்

இப்பயிற்சியினை பெற 18 முதல் 45 வயது நிரம்பிய ஆதிதிராவிடர்/பழங்குடியினர் மாணாக்கர்களாக இருக்க வேண்டும்.பத்தாம் வகுப்பு/ITI /டிப்ளமோ ஏதேனும் ஒரு பட்டபடிப்பில் தேச்சி பெற்றிருக்க வேண்டும் .பாஸ்போர்ட் உரிமம் ஆற்றும் மருத்துவரின் உடற்தகுதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும், பயிற்சிக்கான கால அளவு 10 நாட்கள் ஆகும் .இப்பயிற்சியானது கல்வி வளாகம் மற்றும் விவசாய நிலத்தில் பாத்து நாட்கள் அளிக்க படும் .பயிற்சிக்கான மொத தொகை ரூ.61,000 தாட்க்கோ மூலம் வழங்க படும்.

இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர்/பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள் திரையில் காணும் இணையத்தளத்தில் http://www.tahdco.com/ பதிவு செய்து கொள்ளலாம்.

8,நாமக்கல்லில் வரலாறு காணாத அளவு முட்டை விலை உயர்வு

நாமக்கல் மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் தினமும் 4.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டை சத்துணவு திட்டத்திற்கு சப்ளை செய்யப்பட்டு வட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு முட்டையின் விலையை நிர்ணயம் செய்கிறது.

இதன்படி கடந்த ஜனவரி 9ம் தேதி ரூ.5.55 பைசாவாக இருந்த முட்டை விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.5.65 பைசாவாக இருந்தது.கடந்த ஆண்டு முட்டை விலை ரூ.5.50 பைசாவாக இருந்தது. முட்டை வரலாற்றில் இதுவே அதிகபட்ச விலையாகும். அதுமட்டுமின்றி, கடைசி நாளில் ரூ.5.55 பைசாவாக இருந்த முட்டை விலை, தற்போது அதையும் தாண்டி ரூ.5.65 பைசா அதிகரித்துள்ளது.

50 ஆண்டு கால கோழி வளர்ப்பு வரலாற்றில் இதுவே அதிகபட்ச விலையாகும். சென்னையில் சில்லரை விலையில் முட்டை ஒன்று ரூ.6 முதல் ரூ.6.50 வரை விற்பனையாகிறது.

9,இன்றைய காய்கறி விலை

 • தக்காளி-ரூ.20
 • உருளைக்கிழங்ங்கு -ரூ.35
 • பெரிய வெங்காயம் -ரூ.24
 • சிறிய வெங்காயம் -ரூ.80
 • வெண்டைக்காய் -ரூ.80
 • பச்சை மிளகாய் -ரூ.25
 • தேங்காய் -ரூ.25
 • கேரட் -ரூ.35
 • காலிபிளவர் -ரூ.30
 • கத்திரிக்காய் -ரூ.35
 • பீட்ரூட் -ரூ.35

10,வானிலை அறிக்கை

 தமிழ்நாடு ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவ கூடும்.

ஓரிரு இடங்களில் அதிகாலை வேலையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.

நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க:

தமிழக விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் மானியம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!

எண்ணெய் வகைகள் திடீர் விலை உயர்வு!

English Summary: Chief Minister gave compensation under crop insurance scheme. Published on: 12 January 2023, 12:18 IST

Like this article?

Hey! I am Yuvanesh Sathappan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.