1. செய்திகள்

எண்ணெய் வகைகள் திடீர் விலை உயர்வு!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Oil Price Hike

விருதுநகர் மார்க்கெட்டில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி, இந்தவாரம் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் கடலை எண்ணெய், நல்லெண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, விருதுநகர் மார்க்கெட்டில் கடலை எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.30 விலை உயர்ந்து ரூ.3,030 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.330 விலை உயர்ந்து ரூ.6,270 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.1,580 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500 ஆகவும் விற்பனையாகிறது.

நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7,000 ஆகவும், கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.200 விலை உயர்ந்து ரூ.5 ஆயிரம் ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2,300 ஆகவும் விற்பனையாகிறது. சீனி 100 கிலோ ரூ.3,740 ஆகவும், கொண்டைகடலை குவிண்டால் ரூ.5,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பொரிக்கடலை 50 கிலோ ரூ.4,000 ஆகவும், மைதா முதல் ரகம் ரூ.4,280 ஆகவும், 2ம் ரகம் ரூ.3,500 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ.1,050 ஆகவும், ரவை 30 கிலோ ரூ.1,450 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.940 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.6,800 ஆகவும், பட்டாணி பருப்பு ரூ.6,800 ஆகவும், மசூர் பருப்பு ரூ.10,200 ஆகவும் விற்பனையாகிறது.

மேலும், உளுந்து 100 கிலோ மூட்டை ரூ.7,500 முதல் ரூ.7,800 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.200 விலை குறைந்து ரூ.11,000 ஆகவும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.9,400 ஆகவும் விற்பனை ஆனது. பாசிப்பருப்பு 100 கிலோ மூட்டை ரூ.9,800 ஆகவும், பாசிப்பயறு ரூ.7,400 முதல் ரூ.9,100 வரையிலும் விற்பனையாகிறது. துவரை 100 கிலோ மூட்டை ரூ.6,400 முதல் ரூ.7,700 வரையிலும், துவரம் பருப்பு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.11 ஆயிரம் வரையிலும் விற்பனையாகிறது. மல்லி லயன் ரகம் 40 கிலோவிற்கு ரூ.300 விலை குறைந்து ரூ.3,800 முதல் ரூ.3,900 வரையிலும், மல்லி நாடு ரகம் ரூ.5,500 முதல் ரூ.6 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

முண்டு மிளகாய் வத்தல் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும், ஏ.சி.வத்தல் ரூ.2 ஆயிரம் விலை குறைந்து ரூ.23 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், காபி பிளாண்டேஷன் பிபி ரகம் 50 கிலோ ரூ.21,600 ஆகவும், ஏ ரகம் ரூ.21,500 ஆகவும், சி ரகம் ரூ.19,500 ஆகவும், ரோபஸ்டா பிபி ரகம் ரூ.9,800 ஆகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.8 ஆயிரமாகவும் விற்பனையாகிறது.

மேலும் படிக்க:

ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் அசத்தும் மருத்துவ தம்பதி

சீறுநீரகக் கல்லடைப்பு பிரச்னையா? இதை சாப்பிடுங்க!

English Summary: A sudden increase in the price of oil types! Published on: 10 January 2023, 09:36 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2023 Krishi Jagran Media Group. All Rights Reserved.