1. செய்திகள்

SSC-CGL தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு முற்றிலும் இலவசம்!விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!

Yuvanesh Sathappan
Yuvanesh Sathappan
Coaching Course for SSC-CGL Exams Totally Free!How to Apply? Details inside!

‘நான் முதல்வன்' திட்டமானது மாண்புமிகு தமிழக முதல்வரின் தொலைநோக்குத் திட்டமாகும். அதன் கீழ், நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவானது ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையங்களால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் வெற்றிபெற, பயிற்சி மற்றும் பிற தேவையான உதவிகளை வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்துவதற்காகத் தொடங்கப்பட்டது.

"ரயில்வே/வங்கி/எஸ்எஸ்சி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு” என்பது தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவால் வடிவமைக்கப்பட்ட பயிற்சித் திட்டமாகும்.

இந்தப் பயிற்சித் திட்டத்தின் மூலம் தகுதியுடைய தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இலவச வகுப்புகள், தேர்வுகள், பாடப்புத்தகங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

இப்பயிற்சி திட்டத்தின் மூலம் ஒன்றிய அரசின் வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைப் பயிற்றுவிப்பதற்காக நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவு தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 150 விண்ணப்பதாரர்களை ஏற்கின்றது . 150 க்கும் மேல் விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில், 10- ம் வகுப்பு, 12 ம் வகுப்பு, இளநிலை பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் கல்விக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் .

குறிப்பு : தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. தகுதி:

அ. குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பை
முடித்திருக்க வேண்டும்.

ஆ. வயது எல்லை:
i. குறைந்தபட்சம் -21
ii அதிகபட்சம்-35

2. விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் விண்ணப்பிக்க
வேண்டும்.
https://candidate.tnskill.tn.gov.in

முக்கிய நாட்கள் :

1. அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி- 10.05.2023
2. ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி- 11.05.2023
3. விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி -20.05.2023
4. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பட்டியல் வெளியீடு -23.05.2023
5. பயிற்சி வகுப்பின் தொடக்க தேதி- 25.05.2023

பாடத்திட்டம் மற்றும் பயிற்சி மைய விவரங்கள்

பயிற்சிக் காலம்:

1. பயிற்சி வகுப்புகள் 25.05.2023 அன்று முதல் தொடங்கவிருக்கிறது.
2. இந்த முழுநேர பயிற்சியானது மொத்தம் 100 நாட்களுக்கு நடைபெறும்.

வகுப்புகள்:

1. முழு நேர வகுப்புகள் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடத்தப்படும். (திங்கள் - வெள்ளி)
2. ஒவ்வொரு நாளும் மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழிகாட்டுதல் வகுப்புகள் நடத்தப்படும். (திங்கள் - வெள்ளி)
3. வகுப்புகள் மற்றும் வழிகாட்டல் திட்டத்தில் கலந்துகொள்வது கட்டாயமாகும்

தேர்வுகள்:

1. பிற்பகல் அமர்வில் பயிற்சித் தேர்வுகள் தினசரி அடிப்படையில் நடத்தப்படும்.

2. வாராந்திர தேர்வுகள் சனிக்கிழமைகளில் நடத்தப்படும்.

பாடப்புத்தகங்கள்:

பதிவு செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் மற்றும் பாடத்திட்டம் தொடர்பான அனைத்து தலைப்புகளுக்கான கையேடுகளும் வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் வகுப்பறை இருக்கும் இடம், இறுதித் தேர்வுப் பட்டியலுடன், அதாவது 23.05.2023 அன்று அறிவிக்கப்படும்.

For Further queries please contact: 8056258702 / 7845786117/ 7845766103

https://www.naanmudhalvan.tn.gov.in/servicedesk/users/index.php

மேலும் படிக்க

உள்ளூர் வங்கி மூலம் 2 லட்சம் கறவை மாடு வழங்கும் திட்டம்- அமைச்சர் தகவல்

ரேசன் கடைகளுக்கு ISO தரச் சான்றிதழ்: கூட்டுறவுத் துறை செயலரின் அருமையான முயற்சி!

English Summary: Coaching Course for SSC-CGL Exams Totally Free!How to Apply? Details inside! Published on: 17 May 2023, 05:47 IST

Like this article?

Hey! I am Yuvanesh Sathappan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.