1. மற்றவை

இந்த 5 காரணங்களால் ரூ.2000க்கான தவணை நிலுவையில் உள்ளது.

Sarita Shekar
Sarita Shekar
kisan

 பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனாவின் கீழ், ஏப்ரல்-ஜூலை மாதங்களுக்கு 2000 ரூபாய்க்கான தவணையை 10,34,32,471 விவசாயிகளுக்கு மோடி அரசு வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் தொடக்கத்திலிருந்து, தற்போது வரை ரூ.2000க்கான தவணை  விவசாயிகளின் கணக்குகளை எட்டியுள்ளது, ஆனால் விண்ணப்பித்த பல விவசாயிகள் உள்ளனர், அவர்கள் தவணை பெறவில்லை. பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனாவின் கீழ் வேளாண் துறை மத்திய அரசுக்கு அனுப்பிய சில சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களில், பி.எஃப்.எம்.எஸ் (PFMS) நிதி பரிமாற்றத்தின் போது பல தவறுகள் காணப்பட்டன, இதன் காரணமாக தவணைத் தொகை மாற்றப்படவில்லை. இதன் காரணமாக, விண்ணப்பத்தில் செய்யப்பட்ட தவறுகள் திருத்தம் செய்ய திருப்பி அனுப்பப்படுகின்றன.

என்ன வகையான தவறுகள் உள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள்

விவசாயியின் பெயர் "ஆங்கிலத்தில்" இருக்க வேண்டும்

பயன்பாட்டில் "HINDI" இல் தோன்றும் விவசாயி, தயவுசெய்து பெயரை மாற்றவும்.

விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பெயருக்கும் வங்கி கணக்கில் உள்ள விண்ணப்பதாரரின் பெயருக்கும் உள்ள வேறுபாடு

விவசாயி தனது வங்கி கிளைக்குச் சென்று ஆதார் மற்றும் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள பெயரின் படி தனது பெயரை வங்கியில் பதிவு செய்ய வேண்டும்.

IFSC குறியீட்டை எழுதுவதில் தவறு.

வங்கி கணக்கு எண்ணை(bank account number)  எழுதுவதில் தவறு.

கிராமத்தின் பெயரில் தவறு.

மேற்கூறிய அனைத்து பிழைகளையும் சரிசெய்ய ஆதார் அட்டை சரிபார்ப்பு அவசியம். ஆதார் அட்டை சரிபார்ப்புக்கு, விவசாயிகள் தங்களது அருகிலுள்ள சி.எஸ்.சி (CSC ) / வசுதா கேந்திரா / சஹாஜ் கேந்திராவை தொடர்பு கொள்ள வேண்டும்.

இது போன்ற தவறுகளை ஆன்லைனில் சரிசெய்யவும்

முதலில் நீங்கள் PM Kisan வலைத்தளமான pmkisan.gov.in க்கு செல்ல வேண்டும்.

இங்கே நீங்கள் மேலே ஒரு கிளிக் ஃபார்மர்ஸ் கார்னர்  தேரியும் (காண்பீர்கள்)

இந்த இணைப்பைக் கிளிக் செய்தால், ஆதார் அட்டை திருத்தத்தின் இணைப்பு தோன்றும், அங்கு நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.

இதற்குப் பிறகு, உங்கள் முன்னால் திறக்கும் பக்கத்தில், உங்கள் ஆதார் அட்டை எண்ணை நீங்கள் திருத்தலாம்.

மறுபுறம், கணக்கு எண் தவறாக உள்ளிடப்பட்டு, உங்கள் கணக்கு எண்ணில் ஏதேனும் மாற்றத்தை செய்ய விரும்பினால், நீங்கள் உங்கள் வேளாண் துறை அலுவலகம் அல்லது லேக்பாலை தொடர்பு கொள்ள வேண்டும். அங்கு செல்வதன் மூலம், நீங்கள் செய்த தவறை சரிசெய்யலாம்.

மேலும் படிக்க

PM-Kisan Scheme: 45 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2,000 பணம்!

PM Kisan : விவசாயிகளின் வங்கிக்கணக்கில் விரைவில் 8-வது தவணை- உங்கள் கணக்கை Check செய்ய எளிய டிப்ஸ்!

PM Kisan Yojana: இலவசமாக கிசான் கிரெடிட் கார்டை பெறுவது எப்படி?

English Summary: PM Kisan: Your installment of Rs 2000 is hanging due to these 5 reasons Published on: 22 June 2021, 04:38 IST

Like this article?

Hey! I am Sarita Shekar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.