1. செய்திகள்

புழக்கத்தில் போலி ரூபாய் நோட்டுகள் -அடையாளம் காண்பது எப்படி?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Counterfeit banknotes in circulation - How to identify?

இந்த நாட்டில் எல்லாவற்றிலும், போலியும், கலப்படமும் நிரம்பி வழியாமல் இல்லை. எனவே நாம் விழிப்புடன் இருந்தால் மட்டுமே, ஏமாறாமல் தப்பித்துக்கொள்ள முடியும். நாட்டில் போலி ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் அதிகரித்து வருகிறது. பல நேரங்களில் போலி ரூபாய் நோட்டுகள் மற்றும் உண்மையான ரூபாய் நோட்டுகளை மக்களால் எளிதில் அடையாளம் காண முடிவதில்லை.

ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, 2020 - 21 ஆம் நிதியாண்டில் சுமார் 5.45 கோடி ரூபாய் போலி ரூபாய் தாள்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளது. அதாவது, 2,08, 625 போலி நோட்டுகள் கைப்பற்றியதாக கூறியுள்ள ரிசர்வ், அவற்றில் 100 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை அதிகம் எனக் கூறியுள்ளது.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்துவது 100 ரூபாய் நோட்டு என்பதால், அதனை குறிவைத்து மோசடி கும்பல் கள்ள நோட்டுகளை சந்தையில் இறக்குவதாகக் கூறப்படுகிறது.

எனவேப் போலி ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வதுதான் தற்போதைய அவசியம்.

கண்டுபிடிக்கும் வழிகள் (Ways to find out)

  • நல்ல ரூபாய் நோட்டுகளின் இரண்டு புறத்திலும் தேவநாகரி எழுத்தில் 100 என்பது எழுதப்பட்டிருக்கும்.

  • ரூபாய் நோட்டுகள் நடுவே காந்தியின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும். 100 ரூபாய் நோட்டுகள் என்றால் RBI, India மற்றும் 100 என்பவை சிறிய எழுத்துகளில் எழுதியிருக்கும்.

  • மேலும், ரிசர்வ் வங்கியின் முத்திரை, வாக்குறுதி, அசோகத்தூண், ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்து மற்றும் பார்வையற்றோருக்கான அடையாளச் சின்னம் உள்ளிட்டவை அச்சிடப்பட்டிருக்கும்.

  • 200, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில், அவற்றின் மதிப்பு நிறம் மாறும் மையால் எழுதப்பட்டுள்ளது.

  • நோட்டைத் தட்டையாக வைத்திருக்கும் போது, ​​இந்த இலக்கங்களின் நிறம் பச்சையாகத் தோன்றும். சிறிது சுழற்றும்போது அது நீலமாக மாறும்.

  • ஏதாவது ஒரு ஒளி முன்பு ரூபாய் நோட்டை வைத்துப் பார்த்தால் மகாத்மாவின் புகைப்படம் லேசாக தெரியும்.

  • பழைய நோட்டுகளுடன் ஒப்பிடும்போது ஆளுநரின் கையெழுத்து, வாக்குறுதி, ரிசர்வ் வங்கி லோகோ உள்ளிட்டவை வலது புறத்தில் இடம்பெற்றிருக்கும்.

மைய இழை

10, 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளில் வெள்ளி நிறத்திலான இழை ஒன்றும் நோட்டின் மையப்பகுதியில் இடம்பெற்றிருக்கும். வெயிலில் அந்த இழையைக் காண்பித்தால் மஞ்சள் நிறத்தில் தெரியும். இந்த அடையாளங்களைக் கொண்டு கள்ள நோட்டுகளையும், நல்ல நோட்டுகளையும் அடையாளம் கண்டு கொள்வது எளிது.

புதிய நியோகோவ் வைரஸ்- படுபயங்கர உயிர்க்கொல்லி!

English Summary: Counterfeit banknotes in circulation - How to identify? Published on: 29 January 2022, 09:00 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.