1. செய்திகள்

பயிர் பாதுகாப்பு நடவடிக்கைக்கு முக்கியத்துவம்- தனேஷா பயிர் அறிவியல் நிறுவனம் உறுதி

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Dhanesha Crop Science Pvt Ltd Sets goal is to facilitate the farming community

தனேஷா பயிர் அறிவியல் பிரைவேட் லிமிடெட்  நிறுவனம் புது தில்லியில் MD தர்மேஷ் குப்தாவால் நிறுவப்பட்டது.

பயிர் அறிவியலை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு பூச்சிகள், நோய்கள் மற்றும் களைகளிலிருந்து பயிர்களைப் பாதுகாக்க இந்திய விவசாயிகளுக்கு சிறப்பு வேளாண் வேதிப்பொருட்களை வழங்குவதை இந்த நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளது.

விவசாயிகளுக்கு ஒரே அமைப்பின் கீழ் சிறந்த பயிர் பாதுகாப்பு பொருட்களை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கத்தை அடைவதில் இந்திய அரசாங்கத்திற்கு உதவுவதற்காக இந்த புதிய முயற்சி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது எனவும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகள், பிஜிஆர்கள், உயிர்-தூண்டுதல்கள் (bio-stimulants), கரிம உரங்கள் உள்ளிட்ட பரந்த அளவிலான தயாரிப்புகளை வழங்கி, வேளாண் வேதிப்பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் நிறுவனம் சிறந்து விளங்குகிறது. இது குறித்து நிறுவனர் தெரிவிக்கையில், எங்களது தயாரிப்புகள் பருத்தி, நெல், கோதுமை, சோயாபீன்ஸ், கரும்பு, பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற பலதரப்பட்ட பயிர்களை பாதுகாக்க உதவுகின்றன.

தனேஷா பயிர் அறிவியல் பிரைவேட் லிமிடெட் புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு, உயர் தகுதி வாய்ந்த விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் நிபுணர்களைக் கொண்ட குழுவுடன் வலுவான PAN-இந்திய இருப்பை நிறுவியுள்ளது. நிறுவனத்தின் பரந்த வணிக கூட்டாளிகளின் தொடர்புகள், அதன் தயாரிப்புகளை விவசாயிகளுக்கு எளிதாக அணுகுவதை உறுதி செய்கிறது. பொருட்களின் தரம் மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்கு அர்ப்பணிப்புடன் பங்காற்ற எதிர்கால சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள தனேஷா நிறுவனம் உறுதியாக உள்ளது.

இந்தியாவின் விவசாயத் துறைக்கு ஆதரவளிக்க உறுதிபூண்டுள்ள தனேஷா பயிர் அறிவியல் பிரைவேட் லிமிடெட்  நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தன்னிறைவு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

pic courtesy: Dhanesha Crop Science Pvt Ltd

மேலும் காண்க:

உடல் எடை குறைக்கணுமா? இந்த 5 தோசை ரெசிபியை ட்ரை பண்ணுங்க

English Summary: Dhanesha Crop Science Pvt Ltd Sets goal is to facilitate the farming community Published on: 06 May 2023, 09:58 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.