1. செய்திகள்

கீழ்பவானி விவகாரத்தில் விவசாயிகளிடையே கருத்து வேறுபாடு!

Poonguzhali R
Poonguzhali R
Disagreement among the farmers on the matter of Kilpawani!

கீழ்பவானி திட்ட கால்வாய் (எல்பிபி) நவீனமயமாக்கல் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு இருந்தும் விவசாயிகளிடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது. இந்நிலையில், இத்திட்டம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. அமைச்சர் எஸ்.முத்துசாமி தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

மே 1ம் தேதி முதல் நவீனமயமாக்கல் பணிகள் தொடங்கவில்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் ஒருபக்கம் அறிவித்துள்ளனர்.இதற்கிடையில், இதற்கு அனுமதி வழங்கினால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என மற்றொரு விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். திட்டம் ரத்து செய்யப்படவில்லை.

கீழ்பவானி ஆயக்காட்டு நில உரிமையாளர்கள் சங்க செயலாளர் கே.வி.பொன்னையன் கூறுகையில், ''எல்.பி.பி., வாய்க்கால், ஈரோடு கீழ்பவானி அணையில் (எல்.பி.டி.,) துவங்கி, திருப்பூர் வழியாக, கரூரில் முடிகிறது. 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கால்வாய் இன்னும் நவீனப்படுத்தப்படாமல் உள்ளது.

இதனால், ஆண்டுதோறும், கால்வாயில் தண்ணீர் திறக்கும்போது, பல இடங்களில் கசிவு ஏற்படுகிறது. கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய ஒவ்வொரு முறையும் 10 நாட்கள் தண்ணீர் நிறுத்தப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதை தவிர்க்க, கால்வாயை நவீனப்படுத்த வலியுறுத்தி வருகிறோம்,'' என்று கூறியுள்ளார்.

“இப்போது சென்னை உயர்நீதிமன்றம் இந்தத் திட்டப் பணிகளை மே 1 முதல் தொடங்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது. நாங்கள் செவ்வாய்கிழமை LBP அதிகாரிகளிடம் அவ்வாறு செய்யக் கோரி மனு அளித்தோம். பணிகள் தொடங்கவில்லை என்றால், மே 5 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்,'' எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையில், கீழ் பவானி பாசனப் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் எம்.ரவி கூறுகையில், "LLP கால்வாய் முழுவதும் கான்கிரீட் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். அப்படிச் செய்தால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதோடு, ஏராளமான மரங்கள் அழிந்துவிடும். எனவே, இதை எதிர்த்து, அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்துகிறோம். இந்த திட்டத்தில் ஏற்கனவே உள்ள கான்கிரீட் கட்டமைப்புகளை மட்டும் புதுப்பித்து, புதிய கட்டமைப்புகளை உருவாக்காமல் இருந்தால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இதுகுறித்து அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்,'' என்று கூறியுள்ளார்.

LLP செயல் பொறியாளர் கண்ணன் கூறுகையில், ""மே 1ம் தேதி முதல் பணிகளை துவக்க திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தின் கீழ் கால்வாயில் எங்கும் கான்கிரீட் தளம் கட்டப்படாது, இது குறித்து கூட்டத்தில் விவசாயிகளிடம் விளக்குவோம்,'' என்றார். இந்த கால்வாயை நவீனப்படுத்துவதற்கு மாநில அரசு ஏற்கனவே 709 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

காரைக்காலில் முதல் முறையாக 2 ஏக்கரில் தினை சாகுபடி!

தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம்! வறட்சியில் அல்லிகுளம் கிராமம்!!

English Summary: Disagreement among the farmers on the matter of Kilpawani! Published on: 27 April 2023, 03:02 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.