1. செய்திகள்

MSP-யுடன் போனஸ் தொகைக்காக காத்திருக்கும் விவசாயிகள்: ஆட்டம் காணும் நெல் கொள்முதல்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan

procurement of paddy

விவசாயிகள் அரசின் சார்பில் கூடுதல் போனஸ் தொகை கிடைக்கும் என்கிற நம்பிக்கையில், விளைவித்த நெல்லினை கையிருப்பில் வைத்திருப்பதால், அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் நெல் கொள்முதல் அளவானது 13% வரை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் அரசின் சார்பில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது குவிண்டாலும் ரூ.2183 என்கிற விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநில விவசாயிகள் MSP-க்கு மேல் கூடுதல் போனஸ் தொகை கிடைக்கும் என எதிர்பார்த்து நெல்லினை இருப்பு வைத்துள்ளனர்.

சத்தீஸ்கரில் சமீபத்தில் நடைப்பெற்று முடிந்த  சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த பாஜக உட்பட, தெலுங்கானாவில் புதிதாக அரசு அமைத்துள்ள காங்கிரஸும் நெல்லுக்கான கொள்முதல் விலையினை உயர்த்தி வழங்குவதாக தேர்தல் வாக்குறுதியின் போது  சூசகமாக கூறியது. இதுதான் விவசாயிகள் நெல்லினை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுச் செல்லாமல் இருப்பு வைத்துள்ளமைக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

அதே சமயம் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நெல் கொள்முதல் வலுவாக இருந்துள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நெல் கொள்முதல் முழுமையாக நிறைவடைந்த நிலையில், விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மொத்த கொள்முதல் முறையே 18.54 மெட்ரிக் டன் மற்றும் 5.88 மெட்ரிக் டன் ஆகும். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.

சத்தீஸ்கரை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “புதிய அரசாங்கம் இப்போதுதான் உருவாகியுள்ளதால், அதிக விலைக்கு ஏஜென்சிகள் மூலம் தானியங்களை விற்க விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

2022-23 பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) மாநிலம் 8.75 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்தது, இது முக்கிய தானிய உற்பத்தி மாநிலங்களில் அரசாங்கத்தின் மொத்த கொள்முதல் அளவான 73.5 மெட்ரிக் டன்னில் 12% ஆகும்" என்றார்.

தெலுங்கானாவில் இதுவரை விவசாயிகளிடமிருந்து 3.56 மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 26% குறைந்துள்ளது. விவசாயிகள் புதிய அரசாங்கத்திடமிருந்து MSP-யுடன் கூடுதல் போனஸை எதிர்பார்க்கிறார்கள், இதனால் நெல்லினை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு செல்லாமல் இருப்புகளை வைத்திருப்பதாக ஒரு அதிகாரி கூறினார்.

இருப்பினும், அடுத்த ஆண்டு மே மாதம் வரை காரீஃப் பருவ கொள்முதல் தொடரும் என்பதால், இந்த ஆண்டு நெல் கொள்முதலில் உள்ள இடைவெளி வரும் மாதங்களில் குறையும் என்று உணவு அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.

ஒடிசா, பீகார், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அரிசி கொள்முதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. நெல் சாகுபடி அதிக பரப்பளவில் இருந்தாலும், 2023-24 பயிர் ஆண்டில் (ஜூலை-ஜூன்) நிலவிய சீரற்ற பருவமழை காரணமாக இந்தாண்டு உற்பத்தி மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

Read more:

விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் பயிர்கடன்- ஆட்சியர் அழைப்பு

சட்டென்று விலை அதிகரித்த தங்கம்- சென்னையில் இன்றைய விலை என்ன?

English Summary: Farmers waiting for bonus amount with MSP for procurement of paddy

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.