1. செய்திகள்

எட்டாத உயரத்தில் இஞ்சி விலை- மற்ற காய்கறி விலை எப்படி?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan

Ginger price at an unreachable height

தமிழர்களின் உணவு முறைகளில் காய்கறிகளின் பங்கு அதிகம். பருவமழை மாற்றம், திடீர் நோய் தாக்குதல், மோசமான வானிலை, லாரிகள் ஸ்ட்ரைக் போன்ற பல்வேறு காரணங்களால் அவ்வப்போது சந்தைகளில் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை உயர்வு ஏற்படுகிறது.

இப்பகுதியில் அன்றாடம் சந்தைகளில் காய்கறிகளின் விலை நிலவரம் புதுப்பிக்கப்படும். அந்த வகையில் சென்னையின் முக்கிய வணிகச்சந்தையாக கருதப்படும் கோயம்பேடு மார்கெட்டில் இன்றைய தினம் காய்கறிகளின் விலை நிலவரம் ( சேகரிக்கப்பட்ட தகவல்- விற்பனையாளர்களை பொறுத்து விலையில் ஒரு சில மாற்றம் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்க.) ஒரு கிலோவிற்கு காய்களின் இன்றைய விலை நிலவரம் பின்வருமாறு-

காய்கறி - சில்லரை விலை நிலவரம் :

  • Onion Big (பெரிய வெங்காயம்)- ₹36
  • Onion Small (சின்ன வெங்காயம்)-₹70
  • Tomato (தக்காளி)-₹15
  • Green Chilli (பச்சை மிளகாய்)-₹30
  • Beetroot (பீட்ரூட்)-₹35
  • Potato (உருளைக்கிழங்கு)-₹33
  • Amla (நெல்லிக்காய்-₹102
  • Bitter Gourd (பாகற்காய்)-₹40
  • Bottle Gourd (சுரைக்காய்)-₹25
  • Butter Beans (பட்டர் பீன்ஸ்)-₹64
  • Broad Beans (அவரைக்காய்)-₹60
  • Cabbage (முட்டைக்கோஸ்)-₹8
  • Carrot (கேரட்)- ₹35
  • Coconut (தேங்காய்)-₹36
  • Brinjal (கத்திரிக்காய்)-₹40
  • Brinjal (Big) (கத்திரிக்காய்)- ₹50
  • Ginger (இஞ்சி)-₹230
  • Green peas (பச்சை பட்டாணி) - ₹150
  • மாங்காய்- ₹110
  • வெண்டைக்காய்-₹70
  • பூசணி-₹25
  • முள்ளங்கி-₹20
  • பீர்க்கங்காய்-₹50
  • நூக்கல்-₹45
  • சௌ சௌ-₹18
  • வாழைத்தண்டு-₹20
  • கோவைக்காய்-₹45
  • பூண்டு- ₹169

காய்கறி விலையிலை போன்று, புகழ்பெற்ற சேலம் பூ மார்க்கெட்டில் இன்றைய தினம் விற்கப்படும் பூக்களின் விலை நிலவரம் பின்வருமாறு- (பூவின் பெயர் – விலை ரூபாய்)

  • மல்லி =1000
  • முல்லை=600
  • ஜாதிமல்லி=320
  • காக்கட்டான்=200
  • கலர் காக்கட்டான்=200
  • மலைக்காக்கட்டான்=140
  • அரளி = 200
  • வெள்ளைஅரளி=200
  • மஞ்சள் அரளி =200
  • செவ்வரளி =300
  • ஐ.செவ்வரளி =220
  • நந்தியாவட்டம்=30
  • சி.நந்திவட்டம் =50
  • சம்மங்கி=50
  • சாதா சம்மங்கி =70

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் ஜலகண்டாபுரம் உப கிளையில் 19.12.2023-ல் நடைபெற்ற கொப்பரை டெண்டரில் 236 மூட்டைகள் வரத்து வந்தது.மதிப்பு ரூ 8.64 இலட்சம் ஆகும். முதல் தரம் 68.15 முதல் 85.10 வரையிலும், இரண்டாம் தரம் 33.80 முதல் 63.15 வரையிலும் விலை தீர்ந்தது. அடுத்த டெண்டர் 26.12.2023 செவ்வாய் கிழமை நடைபெறும்.

மேலும் ஜலகண்டாபுரம் உபகிளையில் இன்று 19.12.2023 தேங்காய் பருப்பு (சல்பர் இல்லாதது) 19 மூட்டைகள் 856 கிலோ கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைமையகத்தில் 19.12.2023 ல் நடைபெற்ற பருத்தி ஏலத்தில்  79 மூட்டைகள் வந்தது. BT ரூ. 6519 முதல் ரூ. 7325 வரையிலும் தீர்ந்தது. மொத்த மதிப்பு ரூ 1.42 இலட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது. அடுத்த பருத்தி , எள் மற்றும் கடலைக்காய் டெண்டர் 26.12.2023 செவ்வாய்கிழமை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தை நிலவரம் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள கிரிஷி ஜாக்ரான் இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

Read also:

சட்டென்று விலை அதிகரித்த தங்கம்- சென்னையில் இன்றைய விலை என்ன?

விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் பயிர்கடன்- ஆட்சியர் அழைப்பு

English Summary: Ginger price at an unreachable height How about other vegetable prices in chennai

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.