
Federal government advises states to increase coal imports
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மின்வெட்டு, தீராத பிரச்சினையாக உருவெடுத்த நிலையில், தமிழக மின்சாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், நிலக்கரி இறக்குமதியை மாநிலங்கள் அதிகரிக்க வேண்டுமென, மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, நிலக்கரியின் விலை அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசின் அறிவிப்பானது, நிலக்கரி விலையை மேலும் கூட்டுவதாக அமைகிறது.
மின்வெட்டுப் பிரச்சனை (Shutdown Problem)
மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டியது மின்சாரம், தடைபட்டதால் கடந்த வாரத்தில் இரவு நேரங்களில், தமிழகமெங்கும் மின்வெட்டுப் பிரச்சனை ஏற்பட்டது. கோடையில், மின்சாரத் தேவை அதிகரிப்பதே இதற்கு காரணம் என், தமிழக மின்சாரத் துறை கூறியுள்ளது.
நிலக்கரி (Coal)
தமிழகத்தில், நேற்று முன்தினம் 17 ஆயிரத்து, 563 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப மாற்று ஏற்பாடுகள் மூலம், சீரான மின் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போதும் கூடுதலாக 500 மெகாவாட் மின்சாரம் கையிருப்பில் உள்ளது.
ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் மின் பற்றாக்குறை நிலவுகிறது. நாடு முழுதும் நிலக்கரி பற்றாக்குறை உள்ளது. கோடை காலத்தில் மின் தேவையை சமாளிக்க, 3,000 மெகாவாட் மின்சாரம் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்ய 'டெண்டர்' விடப்பட்டுள்ளது. தமிழகத்தில், இரண்டு நாள் தேவைக்கும் குறைவாகவே நிலக்கரி கையிருப்பு உள்ளது. மின் வினியோக சாதனங்களில் பழுது ஏற்பட்டால் கூட, பற்றாக்குறையால் தான் மின்தடை என, அரசுக்கு எதிராக தகவல் பரப்பப்படுகிறது.
மேலும் படிக்க
பெட்ரோல் (ம) டீசல் வரியை குறைக்காத மாநிலங்கள்: பிரதமர் மோடி பேச்சு!
தடுப்பூசி செலுத்தியதில், உலகத்திற்கே இந்தியா முன்னுதாரணம்: பிரதமர் மோடி பெருமிதம்!
Share your comments