1. செய்திகள்

விவசாயிகளின் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆராய 4 துணை குழுக்கள் அமைப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
Agriculture

விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து ஆராய கடந்த மாதம் 18-ந் தேதி மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. முன்னாள் விவசாய செயலாளர் சஞ்சய் அகர்வால் தலைமையிலான இக்குழுவில் 26 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்தநிலையில், இக்குழுவின் முதலாவது கூட்டம் நேற்று நடைபெற்றது.

4 துணை குழுக்கள் (4 sub Teams)

40 விவசாய சங்கங்கள் அடங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சாவுக்கு 3 உறுப்பினர்கள் பொறுப்பு ஒதுக்கப்பட்ட போதிலும், உறுப்பினர்களை நியமிக்காத மோர்ச்சா, இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நாள் முழுவதும் நடந்த ஆலோசனை கூட்டத்தில், விவசாயிகளின் 3 முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய 4 துணை குழுக்களை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

பல்வகை பயிர்களை பயிரிடுவது, பயிரிடும் முறையில் மாற்றம், குறைந்தபட்ச ஆதரவு விலையை மிகவும் வெளிப்படையாக ஆக்குவது ஆகியவை குறித்து முதல் துணை குழு ஆய்வு செய்யும். 2-வது குழு, நுண்நீர் பாசனம் பற்றியும், 3-வது குழு இயற்கை விவசாயம் பற்றியும், 4-வது குழு பல்வகை பயிர்களை பயிரிடுவது பற்றியும் ஆய்வு செய்யும்.

மேலும் படிக்க

விவசாயத்திற்கு தனியாக மின் வழித்தடம்: 1,500 கோடி ரூபாயில் பணிகள் தொடக்கம்!

ஆங்கிலம் தெரியாத விவசாயியை கிண்டலடித்த வங்கி அதிகாரிகளுக்கு கண்டனம்!

English Summary: Formation of 4 sub-committees to study the main problems of farmers! Published on: 23 August 2022, 06:16 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.