1. செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ரூ. 50,000 முதல் ரூ.95,000 வரை சம்பளம் உயர்வு

T. Vigneshwaran
T. Vigneshwaran
7th Pay Commision

ஃபிட்மென்ட் காரணி 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது, இதுகுறித்த அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் அடிப்படைச் சம்பளம் ரூ.8000 ஆக உயர்ந்து, ரூ.18000-லிருந்து ரூ.26000 ஆக உயரும்.

மத்திய அரசின் கீழ் பணிபுரியும் ஐம்பத்திரெண்டு லட்ச ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் பேக்டர் குறித்த சில செய்திகளை வெளியிட்டுள்ளது, அதன்படி இந்த மாதத்தில் ஃபிட்மென்ட் பேக்டர் பற்றி பெரிய முடிவை அரசு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு தொடக்க நிலை அடிப்படை ஊதியம் மாதம் ரூ.7000லிருந்து ரூ.18000 ஆக உயர்த்தப்பட்டது.

ஃபிட்மென்ட் பேக்டர் லெவல் மேட்ரிக்ஸ் 1-லிருந்து மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.26,000-லிருந்து ஆரம்பமாகும். 7வது ஊதியக் குழுவில், மத்திய ஊழியர்களின் சம்பளம் ஃபிட்மென்ட் காரணியால் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது மத்திய ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் பேக்டர் 2.57 மடங்கு எனில் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18000 மற்றும் அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ.56900. எடுத்துக்காட்டாக ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 எனில் அலோவன்ஸ் தவிர்த்து அவருடைய சம்பளம் ரூ 18,000 X 2.57 = ரூ 46,260 லாபம் கிடைக்கும்.

ஃபிட்மென்ட் பேக்டர் மூலமாக மத்திய ஊழியர்களின் சம்பளம் இரண்டரை மடங்குக்கு மேல் உயர்கிறது. ஃபிட்மென்ட் பேக்டர் அடிப்படையில், திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் பழைய அடிப்படை ஊதியத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அடிப்படை சம்பளத்தை உயர்த்தும் வகையில் 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்தப்பட இருக்கிறது என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க:

கிசான் கிரெடிட் கார்டை உருவாக்க இந்த 3 ஆவணங்கள் மட்டுமே தேவை

Goat Farming Loan: ஆடு வளர்ப்புக்கு ரூ.4 லட்சம் வரை கடன் கிடைக்கும்

English Summary: Government employees Rs. 50,000 to Rs.95,000 salary increase Published on: 22 August 2022, 07:18 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.