1. செய்திகள்

தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் - அமைச்சர் காமாராஜ்!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Image credit by: New indian express

கொரோனா (Corona Virus) நெருக்கடி நிலையை சமாளிக்க தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் என தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மேலும் ஜூலை மாதத்தின் முதல் மூன்று நாட்கள் பணம் கொடுத்து ரேஷன் பொருட்கள் வாங்கியிருந்தால் அது ஆகஸ்ட் மாதம் ஈடு செய்யப்படும் என்றார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 31.7.2020 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் ஏற்கனவே இந்த ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் கூடுதல் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டது.

ஆகஸ்ட் மாதத்தில் ஈடுசெய்யப்படும் - Sum will be adjusted 

இதேபோல், இம்மாதமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையின்றி துவரம்பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்வாறு ஆணையிடுவதற்கு முன்பு, அதாவது 1.7.2020 முதல் 3.7.2020 வரை குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களான துவரம்பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை நியாய விலைக் கடைகளில் அதற்கான விலை கொடுத்து பெற்றுள்ளனர்.

அவ்வாறு பெற்றுக்கொண்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, அந்த தொகையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் துவரம்பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களின் விலையில் ஈடுசெய்து கொள்ளப்படும். இக்குடும்ப அட்டைதாரர்களுக்கு செல்பேசியில் இதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

மேலும், இதற்குரிய பதிவுகள் விற்பனை முனைய இயந்திரத்தில் மேற்கொள்ளப்படும். மேற்கண்ட குடும்ப அட்டைதாரர்கள், இம்மாதத்திற்கு தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள கூடுதல் அரிசியை நியாயவிலைக் கடைகளில் மீண்டும் சென்று இம்மாதமே பெற்றுக்கொள்ளலாம்

நவம்பர் வரை விலையின்றி அரிசி- Free Rice Till november

அதேபோல், நவம்பர் மாதம் வரை, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, நபர் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக மத்திய அரசு வழங்குவதை கருத்தில்கொண்டு, அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஏற்கனவே ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் வழங்கப்பட்ட அரிசி அளவின்படி நவம்பர் 2020 வரை விலையின்றி அரிசி வழங்கப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவுப் பற்றாக்குறை வராது - No shortage of food Grains in TN 

இந்நிலையில், சென்னையில் கொரோனா தொற்று நோய் மருத்துவ முகாம்களை பார்வையிட்டு பேசிய அமைச்சர் காமாராஜ், இந்த மாதம் நியாயவிலைக் கடைகளில் பொருட்களை வாங்க 6, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வீடுகளுக்குச் சென்று டோக்கன் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட்களை 10-ம் தேதி முதல் வாங்கி கொள்ளாலம். தமிழகத்தைப் பொருத்தவரை உணவுப் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. தற்போதைய நிலையில் தானியக் கிடங்குகளில் மூன்று மாதத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் உள்ளன" என்று கூறினார்.

மேலும் படிக்க... 

PM Kisan திட்டத்தில் இப்போது அதிக விவசாயிகள் பயன் பெறலாம்!

கேன்சர் கில்லர் என்று சொல்லப்படும் முள் சீத்தா பழம்! அதன் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு!

காளான்களை பதப்படுத்தும் மற்றும் விற்பனை முறைகள்!

English Summary: Free rice Will be Distributed in Tamil Nadu till November - Minister Kamaraj! Published on: 07 July 2020, 05:21 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.