1. செய்திகள்

தமிழக அரசு: விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டது!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Power weavers

விசைத்தறி உரிமையாளர்கள், விசைத்தறியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சுரேஷ் தலைமையில் இன்று ஈரோடு பவானி ரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து உதவி இயக்குனர் சரவணனிடம் மனு கொடுத்தனர்.

தமிழகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் 223 விசைத்தறி தொடக்க கூட்டுறவு நெசவாளர் சங்கம் மூலம் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் தமிழக அரசின் பள்ளி சீருடைகள் மற்றும் 1.80 கோடி வேட்டி, 1.80 கோடி சேலை உற்பத்தி மூலம் பல ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் பயன் அடைந்து வந்தனர்.

கடந்த ஒரு மாதமாக ஜவுளித்துறையில் நூல் விலை ஏற்றம் மற்றும் இறக்கம் காரணமாக பல்லாயிரம் தறிகள் வேலையில்லாமல் அதனை சார்ந்த நெசவாளர்களும் அவர் குடும்பத்தாரும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு நெருக்கடியில் உள்ளனர்.

கடந்த பத்து வருடமாக தமிழக அரசின் வேட்டி சேலை உற்பத்தி தொடங்கப்பட்டு அதன் மூலம் பல ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர். ஆனால் இந்த வருடத்திற்கான இலவச வேட்டி சேலை உற்பத்தி இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர்.

எனவே பல ஆண்டுகளாக எவ்வாறு உற்பத்தி ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டதோ அதேபோல் இந்த ஆண்டும் ஜூன் மாதத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அதே ரகமும் தரமும் மாற்றப்படாமல் உற்பத்தி செய்ய உத்தரவிட்டால் பல லட்சம் நெசவாளர் குடும்பங்களில் வாழ்வாதாரம் பொருளாதாரம் காப்பாற்றப்படும்.

இதேபோல் கடந்த வருடம் வேட்டி தயாரிப்பு ஆகஸ்ட் மாதத்திலும் சேலை தயாரிப்பு நவம்பர் மாதத்திலும் தொடங்கப்பட்டதன் காரணமாக உற்பத்தி செய்வதில் பெரும் தொய்வு ஏற்பட்டது. ஆதலால் இந்த வருடம் உற்பத்தியை விரைவில் தொடங்க அனுமதி தர வேண்டும் என அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க

தேங்காய் விலை சரிவதால் அதிருப்தி: மாற்றி யோசிக்க அரசுக்கு நெருக்கடி

English Summary: Government of Tamil Nadu: Livelihood of power weavers destroyed! Published on: 01 July 2022, 06:42 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.