1. செய்திகள்

PM Kisan| அறுவடை இயந்திரங்கள் வாடகைக்கு| G20 மாநாடு| தோட்டக்கலை இலவச பயிற்சி

Deiva Bindhiya
Deiva Bindhiya
PM Kisan|அறுவடை இயந்திரங்கள் வாடகைக்கு|G20 மாநாடு| தோட்டக்கலை இலவச பயிற்சி
PM Kisan | Harvesting machines for rent| G20 Conference| Gardening Free Tutorial

பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தில் நடப்பு 13 ஆம் தவணைத் தொகையும் இனிவரும் தவணைத் தொகைகள் அனைத்தும் ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கில் வழங்கப்படும். இதுவரை தங்களின் வங்கிகணக்குடன் ஆதார் எண் இணைக்காத பயனாளிகள், கட்டணமில்லா (Zero balance) வங்கிகணக்கு துவங்க தங்களின் பகுதியிலுள்ள தபால்துறையை அணுகவும். இச்செய்தி வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளது.

2.வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு, பழுது நீக்கம் தொடர்பான பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி ?

தொழிற்துறையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, இளைஞர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பு திறன்களை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் திருச்சி மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில் “ வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்க பயிற்சி ” வழங்க உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தகவல் வெளியிட்டுள்ளார். இதில், “வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு சேவை வழங்குனர் “ என்ற பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பயிற்சியானது , திருச்சி உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை , அரசு இயந்திர கலப்பை பணிமனையில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் சேர 18 வயது முதல் 45 வயது உடைய எஸ்.எஸ்.எல்.சி, ஐடிஐ,ஏதேனும் ஒரு துறையில் பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு பயின்ற ஊரக இளைஞர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

3.செங்கல்பட்டு விவசாயிகள் 'உழவன்' செயலி மூலம் அறுவடை உபகரணங்களை வாடகைக்கு எடுக்க அறிவுறுத்தல்

செங்கல்பட்டு: விவசாயிகள் உழவன் செயலி மூலம் நேரடியாக இடைத்தரகர்கள் இல்லாமல் அறுவடை கருவிகளை வாடகைக்கு எடுக்கலாம் என செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாவட்டத்தில் நெல் அறுவடை அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு, அறுவடை இயந்திரங்களை பயன்படுத்துவது அவசியம். இம்முறையில், இயந்திரங்கள் மூலம் அறுவடையை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து, தானியங்கள் வீணாவதை தவிர்க்கலாம்" என்றார். எனவே, மாவட்ட விவசாயிகள் பக்கம் சென்று, 'வாடகைக்கு விவசாய இயந்திரங்கள்' என்பதைத் தேர்ந்தெடுத்து, அறுவடை இயந்திரங்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் பெற, அறுவடை இயந்திரங்கள் பற்றி தெரிந்துகொள்ள, துணைப் பக்கத்தின் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்புடைய பகுதியை உள்ளிடலாம்.

4.அகில உலக சிறுதானிய ஆண்டை ஒட்டி தமிழகத்தில் தானியங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு அதிகாரிகளுக்கு அரசின் கடிதம்

அனைத்து செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலர் கடிதம் எழுதியுள்ளார். அதில், அரசுக் கல்லூரிகள், விடுதிகள், அரசு மருத்துவமனைகள், மதிய உணவுக்கூடங்கள், சிறைச்சாலைகள் போன்ற அரசு சார்ந்த நிறுவனகங்களில் சிறுதானியங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட உணவு வகைகளை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்றும், பல்வேறு துறை சார்ந்த ஆய்வுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், பயிற்சிகள், அரசு விழாக்களில் சிறுதானியங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட, லட்டு, மிச்சர், கொழுக்கட்டை, பிஸ்கட், சீடை போன்ற உணவு வகைகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, அவர்கள் அனைத்து துறை செயலாளர்களுக்கும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

5.தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு வாரியம் வழங்கும் தோட்டம் அமைக்கும் பயிற்சி

தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 19, 2023 காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை கோவை, அவிநாசி மெயின் ரோடு, சித்ரா. (பாஸ்போர்ட் அலுவலகம் அருகில்) அமைந்துள்ள டான்காயர் அலுவலகத்தில் மொட்டை மாடி வீட்டுத் தொட்டம் அமைப்பது பற்றிய செய்முறை பயிற்சி முனைவர். டி.கலைவாணன், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், பெங்களூரு மற்றும் People forum of india National Bharath Sevak Samaj (Govt Of India) உதவியுடன் இலவசமாக வழங்கின்றனர். விருமுள்ளவர்கள் பயன்பெறலாம், முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு பதிவு செய்யவும் மகளிருக்கு முன்னுரிமை. வாட்ஸ்ஆப் எண் மற்றும் இணைய முகவரி திரையில் தோன்றும்.

6.10 மாவட்டங்களில் வேளாண் பட்ஜெட்டிற்கான கருத்துகேட்பு நிறைவு - அமைச்சர் தகவல்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே நடப்பாண்டு ( 2023-2024 ) ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரித்தல் தொடர்பாக உழவன் செயலி, கடிதங்கள், மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் இதுவரை 700-க்கும் அதிகமான கருத்துகள் வரப்பெற்றுள்ளதாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார். இதுவரை தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கருத்து கேட்பு கூட்டம் நிறைவு பெற்றுள்ளதாகவும், மீதமுள்ள மாவட்டங்களில் விரைவில் கூட்டம் நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

7.G20: 3 நாள் கூட்டம் இந்தூரில் கோலகலமாக தொடங்கியது, விவசாய பெருமக்கள் சங்கமத்தினர்

G20 நாடுகள், சர்வதேச அமைப்புகள் மற்றும் அழைக்கப்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். பலர் நேற்று இந்தூரின் பாரம்பரிய அரண்மனைக்கு சென்று கண்டுகளித்தனர். பின் கூட்டத்தின் போது, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், உலக நடப்பில் உணவின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு, இந்நேரத்தில் இந்தியாவிற்கு கிடைத்திற்கும் இந்த வாய்ப்பு எவ்வளவு முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க:

UPSC ஆட்சேர்ப்பு 2023: விண்ணப்பிக்க கடைசித் தேதி பிப்ரவரி 21

ஆளில்லா விமானம் தெளிக்கும் நடவடிக்கை குறித்த நேரடி செயல் விளக்கம்

English Summary: PM Kisan | Harvesting machines for rent G20 Conference| Gardening Free Tutorial Published on: 14 February 2023, 05:43 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.