1. செய்திகள்

,விவசாயிகளுக்கு ரூ.10,000 வரை ஊக்கத்தொகை: உடனே விண்ணப்பிக்கவும்!

Yuvanesh Sathappan
Yuvanesh Sathappan

இத்திட்டத்தின் கீழ் வேர்க்கடலை, பயறு வகை, சிறுதானியம், பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. வேர்க்கடலை, சிறுதானியம் பயிர் செய்த பொதுப்பிரிவு விவசாயிக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம், அட்டவணை பிரிவுக்கு ரூ.6 ஆயிரம் உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. பயிறு வகைகளுக்கு பொதுப்பிரிவு ரூ.2 ஆயிரம், அட்டவணை பிரிவுக்கு ரூ.3 ஆயிரம், பருத்தி பொதுப் பிரிவுக்கு ரூ.10 ஆயிரம், அட்டவணை பிரிவுக்கு ரூ.11 ஆயிரம் உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

 

2,நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம்

நாமக்கல் வட்டார பகுதி விவசாயிகளுக்கு வேளாண்மை -உழவர் நலுத்துறை சார்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது என வேளாண்மை உதவி இயக்குநர். ப. சித்ரா, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நுண்ணீர் பாசனம் மூலம் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி செய்யலாம். நீரில் கரையும் உரங்களை நேரடியாக பயிரின் வேர் பகுதிக்கு வழங்குவதால் உர பயன்பாடு குறைகிறது. களைகளை கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர்ப் பாசன நிறுவனத்தின் மூலம் சொட்டுநீர் பாசன கருவி, தெளிப்பு நீர் பாசனக்கருவி, மழை மழை தூவான் அமைத்து தரப்படுகிறது.

3,ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் அமைக்க 50% மானியம்!

வேளாண்மை-உழவர் நலத்துறை தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பாக மாடித்தோட்டத் தளைகள் விநியோகம் செய்யப்படுகின்றன. முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் மாடி தோட்ட தளைகள் வழங்கப்படுகிறது. மொத்த விலை - ரூ.900 மதிப்பிலான மாடித்தோட்ட கிட் 50 சதவீத மானியத்தில் ரூ.450க்கு விநியோகிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற திரையில் தோன்றும் இணையதளத்தில் பதிவு செய்யலாம். www.tnhorticulture.tn.gov.in/kit_new/ 

4,5000 விவசாயிகளுக்கு ரூ.10000/- மானிய உதவியில் மின்சார மோட்டார் பம்ப்-செட்டுகள்

5000 விவசாயிகளுக்கு ரூ.10000/- மானிய உதவி வழங்க ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் "மானியத்துடன் மின்சார மோட்டார் பம்ப்-செட்டுகள்" திட்டம் செயல்படுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மோட்டார் பம்ப்செட்களை வாங்குவதற்கு அல்லது பழைய திறனற்ற மின்சார மோட்டார் பம்ப்செட்களை மாற்றுவதற்கு - ஆணைகள் வெளியிடப்பட்டது. இதனை, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை -  அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம்  அவர்கள் செய்தி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

5, செங்குத்து தோட்டம் அமைக்க 50% மானியம் வழங்கப்படுகிறது

 

நகர்புறங்களில் உயர் தொழில்நுட்ப முறைகளான செங்குத்து தோட்டம், அங்கிலத்தில் இம் முறை Vertical Farming எனப்படும். இம் முறை தற்போதுள்ள விவசாயத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது. எனவே, செங்குத்து தோட்டம் மூலம் காய்கறி பயிர்கள் சாகுபடியினை ஊக்குவிக்க மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு அலகிற்கு ரூ.15,000, 50% பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற இணையதளம் திரையில் தோன்றும்.

6, TNAU: விதை தரப் பரிசோதனை குறித்து ஒரு நாள் கட்டணப் பயிற்சி

விதையின் தரத்தை கண்டறிவதற்கான பின்வரும் விதைப் பரிசோதனை முறைகள் குறித்த ஒரு நாள் கட்டணப் பயிற்சி விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பிரதி ஆங்கில மாதம், 10ம் தேதி அளிக்கப்பட உள்ளது.

  • விதையின் புறத்தூய்மை
  • விதை முளைப்புத்திறன் மற்றும் வீரியம்
  • விதை நலம்
  • துரித முறை விதை பரிசோதனை

பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விவசாயப் பெருமக்கள், தொழில் முனைவோர், சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் தங்கள் பெயரை திரையில் காணும் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள அறுவுறுத்தப்படுகிறது.

தொலைபேசி: 0422-6611363, கைபேசி: 97104 10932/94422 10145 பயிற்சி நடைபெறும் இடம்: விதை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நேரம் : காலை 10 மணி 

7,ஜல்லிக்கட்டு விதிமுறைகள் அறிவித்த தமிழக அரசு

தமிழ் திருநாளாம் பொங்கல் விழாவையொட்டி தமிழகத்தில் நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளின்போது, காளைகளுடன் அதன் உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மாடுபிடி வீரர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழும், போட்டி நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழும் வைத்திருக்க வேண்டும்.

போட்டியில் அதிகபட்சமாக 300 வீரர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும்

பார்வையாளர்களின் எண்ணிக்கை 150 பேர் அல்லது மொத்த இருக்கையில் பாதியளவு மட்டுமே இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

போட்டியில் பங்கேற்கும் காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு 3 நாட்களுக்கு முன்னதாகவே மாவட்ட நிர்வாகத்தால் அடையாள அட்டை வழங்கப்படும்.

அடையாள அட்டை இல்லாதவர்கள் அரங்கத்திற்குள் நுழைய அனுமதியில்லை.

காளைகள் அவிழ்த்து விடப்படும் நேரத்தில் இருந்து அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோர் உடனடியாக அரங்கில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8,விவசாயிகளுக்கு ரூ.10,000 வரை ஊக்கத்தொகை: உடனே விண்ணப்பிக்கவும்!

புதுவை வேளாண்துறை கூடுதல் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேளாண்துறை பயிர் உற்பத்தி தொழில்நுட்ப திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் வேர்க்கடலை, பயறு வகை, சிறுதானியம், பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. வேர்க்கடலை, சிறுதானியம் பயிர் செய்த பொதுப்பிரிவு விவசாயிக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம், அட்டவணை பிரிவுக்கு ரூ.6 ஆயிரம் உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. பயிறு வகைகளுக்கு பொதுப்பிரிவு ரூ.2 ஆயிரம், அட்டவணை பிரிவுக்கு ரூ.3 ஆயிரம், பருத்தி பொதுப் பிரிவுக்கு ரூ.10 ஆயிரம், அட்டவணை பிரிவுக்கு ரூ.11 ஆயிரம் உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

9, கலைஞர் திட்ட கிராமங்களில் மானிய விலையில் பவர் டில்லர்கள் வழங்குதல்

தமிழ்நாடு அரசு வேளாண்பொறியியல் துறையின் மூலம் ,கலைஞரின் அணைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் கிராமங்கள் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில் விசை உழுவை இயந்திரம்(tiller ) மானியத்தில் வழங்குதல் திட்டம் செயல்படுத்த ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது .

விசை உழுவை இயந்திரம் 39 எண்கள் வழங்க ரூ.33.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .மேற்படி விசை உழுவை இயந்திரம் சிறு,குறு,மகளிர்,SC ,ST விவசாயிகளுக்கு 50% மானியமும் இதர விவசாயிகளுக்கு 40% மானியமும் அதிகபட்சமாக ரூ.85000 என்ற விதத்தில் பின்னேற்பு மானியமாக வழங்கபடுகிறது .

மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள விவசாயிகள் திருப்பத்தூர் உதவி செயற் பொறியாளர் ,வேளாண்மை பொறியியல் துறை சிவசக்தி நகர் ,புதுப்பேட்டை ரோடு ,திருப்பத்தூர் -635601(தொலைபேசி எண்  04179 228255 ) அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தினை சமர்ப்பித்து முன்னுரிமை அடிப்படையில் மானியம் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அமர் கேஸ்வாஹ அவர்கள் தெரிவித்துள்ளார் .

10,கூடுதல் மகசூல் பெற விவசாயிகளுக்கு 50% உர மானியம்!

திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் சம்பா, சொா்ணவாரி, நவரை ஆகிய 3 பருவங்களில் அதிகளவில் நெல் பயிரிட்டு வருகின்றனா். அதேபோல், நிகழாண்டில் மட்டும் 58,000 ஹெக்டோ் பரப்பளவில் நெல் பயிரிட்டுள்ளனா். இதுபோன்ற நெல்லில் கூடுதல் விளைச்சல் பெற துத்தநாக சல்பேட் மற்றும் ஜிப்சம் பயன்படுத்தலாம். இதற்காக மாநில வேளாண் வளா்ச்சித் திட்டம் மூலம் தோ்வு செய்த கிராம விவசாயிகளுக்கு மேற்குறிப்பிட்ட உரங்கள் மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் துத்தநாக சல்பேட் மற்றும் ஜிப்சம் உரங்கள் தற்போது இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. என வேளாண் மற்றும் உழவா் நலத்துறை இணை இயக்குநா் சுரேஷ் தெரிவித்துள்ளாா்.

11,காவிரியில் மீன்வளம் அதிகரிக்க மீன்குஞ்சுகள் விடப்பட்டன

திருச்சிராப்பள்ளி முக்கொம்பு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் நாட்டின் மீன்குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்தல் திட்டத்தினை (river ranching ) மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் 6.01.2023 அன்று தொடங்கி வைத்தார்.

 

12,முக்கிய அறிவிப்பு: பொங்கல் பரிசை ஜனவரி 13 ஆம் தேதி வரை வாங்கலாம்!

ரேஷன் கடைகளுக்கு, பொங்கல் பரிசில் இடம் பெற்றுள்ள பச்சரிசி, சர்க்கரை, 60 சதவீதம் சப்ளை செய்யப்பட்டு உள்ளது; மீதமுள்ளவை இரு தினங்களில் சப்ளை செய்யப்படும்,'' என, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். மேலும் அவர், ஜனவரி 9 முதல் 12 வரை பரிசு தொகுப்பு வழங்கும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. வாங்காதவர்கள், 13ம் தேதி வாங்கலாம். ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசில் இடம் பெற்றுள்ள பச்சரிசி, சர்க்கரை உட்பட, மாதந்தோறும் வழக்கமாக வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும், 60 சதவீதம் சப்ளை செய்யப்பட்டு விட்டது. மீதமுள்ள பொருட்களும், இன்னும் இரு தினங்களில் அனுப்பப்படும் என்றார்.

12,இருமுறை ஒத்திவைக்கப்பட்ட இன்று தொடங்குகிறது தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று தொடங்கப்பட்டது . இந்த போட்டிகளை அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி, ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.. இன்று தொடங்கிய இந்த போட்டியில் சுமார் 800 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல காளைகளுக்கான டோக்கன்கள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாக வழங்கப்பட்டுள்ளன. போட்டியில் நீதிமன்றம் கொடுத்துள்ள அனைத்து வழிகாட்டுதல்களும் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளதாக விழா கமிட்டியினர் தெரிவித்துள்ளனர். இருமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தச்சன்குறிச்சியில் ஜல்லிகட்டு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .

13,இந்த நிதியாண்டைத் தொடங்க, பொது விநியோகத் திட்டக் கடைகளில் சோதனை அடிப்படையில் தினை விநியோகம்: அமைச்சர் ஆர்.சக்கரபாணி

தமிழக அரசு தருமபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பொது விநியோகத் திட்டக் கடைகளில் இந்த ஆண்டு சோதனை அடிப்படையில் ராகி (விரல் தினை) விநியோகத்தைத் தொடங்கும் என்று உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி சனிக்கிழமை தெரிவித்தார்.

“தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுப் பொருள்களுக்கு மறுமலர்ச்சி” என்ற தலைப்பில் நிர்மலா மகளிர் மற்றும் டான்மில்லட் கல்லூரி மற்றும் தமிழ் ஆராய்ச்சி சங்கம் ஏற்பாடு செய்த தமிழ்நாடு தினை மாநாடு - 2023 ஐத் தொடங்கி வைத்து, பிடிஎஸ் விற்பனை நிலையங்களில் தினை விநியோகத்தை படிப்படியாக அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றார்.

14,சர்வதேச தினை ஆண்டுக்கான இந்திய அரசு அளித்த நிதியுதவியை பெற்றுக்கொண்டது UNGA

சர்வதேச தினை ஆண்டு (IYM) 2023க்கான முன்மொழிவுக்கு இந்திய அரசு நிதியுதவி அளித்துள்ளது, இது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் (UNGA) ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது இந்திய அரசாங்கத்திற்கு IYM ஐக் கொண்டாடுவதற்கும், தினைகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை நிலைநிறுத்துவதற்கும் வாய்ப்பளித்துள்ளது.  இந்த மகிழ்ச்சியான தகவலை பிரதமர் நரேந்திர மோடியும் பகிர்ந்துள்ளார்.

15,அலங்காநல்லூர் ஜல்லிகட்டு பணி தீவிரம்: முகூர்த்தக்கால் நடப்பட்டது

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக ஜனவரி 6, 2023 முகூர்த்தக்கால் நடப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வெகுவிமர்சையாக நடைபெறும். குறிப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான வழக்கமான பணிகளை தொடங்கியுள்ள நிலையில், போட்டியை நடத்த அனுமதி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகரிடம் ஊர் கமிட்டி சார்பாக மனு அளிக்கப்பட்டது. அதன்படி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17ஆம் தேதி நடக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

பொங்கல் பரிசு டோக்கன் இன்னும் கிடைக்கவில்லையா? உடனே இதைப் பண்ணுங்க!

English Summary: ,Incentives up to Rs.10,000 for Farmers: Apply Now! Published on: 08 January 2023, 04:45 IST

Like this article?

Hey! I am Yuvanesh Sathappan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.