1. செய்திகள்

டெல்டாவில் அணைகள் தூர்வாரும் பணி தீவிரம்: தமிழக அரசு

Poonguzhali R
Poonguzhali R
Intensification of dams in Delta: Govt. of TN

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நாளில், காவிரி டெல்டா மாவட்டங்களில் உத்தேசிக்கப்பட்ட தூர்வாரும் பணிகளில் 82% நிறைவடைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

4,964 கிமீ நீளமுள்ள நீர்வழிப்பாதைகளில் 4,047 கிமீ இதுவரை தூர்வாரப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துறைமுருகன் செவ்வாய்க்கிழமையான நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். அணையிலிருந்து நீர் செல்லும் டெல்டா பகுதியில் ஆறுகள் முற்றிலும் தூர்வாரப்பட்டுவிட்டன, என்று கூறியிருக்கிறார்.

தினமும் 210 கிலோமீட்டர் நீர்வழிப்பாதைகளைத் தூர்வாருவதற்குக் கூடுதல் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாக, அவர் கூறினார். மீதமுள்ள முன்மொழியப்பட்ட பணிகள், மே 31 ஆம் தேதிக்கு தண்ணீர் வெளியேறி ஆறுகள் மற்றும் கால்வாய்களை (பிராந்தியத்தில்) அடைவதற்கு முன்பு முடிக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்.

அணையின் மொத்த கொள்ளளவான 93.7டிஎம்சி அடியில் இருந்து செவ்வாய்க்கிழமை (தண்ணீர் திறக்கப்பட்ட நாள்) காலை நிலவரப்படி 89.94டிஎம்சி நீர் இருப்பு இருந்தது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் 10,508 கனஅடி நீர்வரத்து உள்ளதாகப் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பாசனத்துக்குப் பயன்படும் வகையில் அனைத்துப் பிரிவினருடன் கலந்துரையாட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தினார். காவிரி, வெண்ணாறு, பெரிய அணைக்கட்டு ஆகியவற்றில் தற்போது நடைபெற்று வரும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு முன்னதாகவே தண்ணீர் திறந்துவிடப்படுவதால், தண்ணீர் வீணாகிவிடக் கூடும் என்று எச்சரித்தார்.

பெரிய அணைக்கட்டு வாய்க்கால்களின் கரையைச் சீரமைத்தல், பாசனக் கட்டமைப்புகளைச் சீரமைத்தல் மற்றும் வெண்ணாறு, காவிரி மற்றும் குடமுருட்டி ஆறுகளில் தடுப்பணைகள் கட்டுதல் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, பெரிய அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்போது உடைப்பு மற்றும் தண்ணீர் வீணாகும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்திருந்த நிலையையும் சுட்டிக் காட்டித் தகுந்த நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் கேட்டுக் கொண்டார்.

மே 26 அல்லது 27ல் மேட்டூர் தண்ணீர் பெரிய அணைக்கட்டுக்கு வந்து சேரும். இதனால் ஒப்பந்ததாரர்கள் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க நேரிடும் என விவசாயிகள் கூறுகின்றனர். விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், 50 சதவீத தூர்வாரும் பணி நிலுவையில் உள்ளது. அனைத்து தூர்வாரும் பணிகளும் முடிவடையாத வரையில் விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்றும் கூறியுள்ள நிலையில் தூர்வாரும் பணி விரைவாக நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

விவசாயிகளின் பொருட்களுக்குப் பேருந்துகளில் தனி இருக்கைகள்

English Summary: Intensification of dams in Delta: Govt. of TN Published on: 25 May 2022, 03:20 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.