1. Blogs

காலாவதியாகி விட்ட பாலிஸியை இனி எளிதில் புதுப்பிக்கலாம்! சிறப்பு திட்டத்தை கொண்டு வந்துள்ளது LIC

KJ Staff
KJ Staff
LIC Policy
Credit : The Economic Times

எதிர்காலத் தேவைக்காக பொதுமக்கள் பலரும் LIC-யில் பாலிசி மூலம் முதலீடு செய்துள்ளனர். அவர்களில், சிலர் பாலிசி தவணைகளை தவறவிட்டு கட்ட முடியாமல் இருக்கின்றனர். மேலும் சிலரின் பாலிசிகள் காலாவதியாகி விட்டது. இவர்களுக்கு எல்லாம் LIC புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. காலாவதியான பாஸிசிகளை (Policy) புதுப்பிக்க எல்.ஐ.சி (LIC) சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் கீழ் பாலிஸியை மார்ச் மாதம் 6ம் தேதி வரை புதுப்பிக்கலாம் என்பதோடு, 30% விகிதம் வரை தள்ளுபடி (Offer) சலுகையையும் பெறலாம்.

பாலிஸிகளை புதுப்பிக்க சிறப்புத் திட்டம்:

கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) பாலிசிதாரர்களுக்கு சில காரணங்களால் காலாவதியான பாலிஸிகளை புதுப்பிக்க ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. காலாவதியான பாலிஸிகளை புதுப்பிக்க எல்.ஐ.சி சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. காலாவதியான பாஸிசிகளை ' புதுப்பிக்க எல்.ஐ.சி (LIC) கொண்டு வந்துள்ள சிறப்பு திட்டத்தின் கீழ், மார்ச் 6ம் தேதி வரை பாலிஸிதாரர், சில நிபந்தனைகளுடன் காலவதியான பாலிஸியை புதுப்பிக்கலாம். தாமதமாக செலுத்துவதற்கான அபராத தொகையும் (penalty) குறைக்கப்படும்.

சிறப்பு திட்டம் குறித்த அறிவிப்பு

சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் தேவையில்லாத பாலிஸிகளை புதுப்பிக்க எல்.ஐ.சி தனது 1,526 சாடிலைட் அலுவலகங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. எல்.ஐ.சி ஒரு அறிக்கையில், "பாலிஸியை புதுப்பிப்பதற்கான சிறப்பு திட்டத்தின் கீழ், சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் (Rules and regulations) கூடிய சில தகுதியான பாலிஸிகளை பிரீமியம் (Premium) செலுத்தாத தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் புதுப்பிக்க அனுமதிக்கப்படும்" என்று கூறினார்.

உடல்நலம் தொடர்பான நிபந்தனைகளிலும் சில சலுகைகள் வழங்கப்படும். நல்ல ஆரோக்கியம் மற்றும் கோவிட் -19 (Covid-19) குறித்த கேள்விகளின் அடிப்படையில் மட்டுமே பெரும்பாலான பாலிஸிகளை புதுப்பிக்க அனுமதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு, எல்.ஐ.சி தனது வாடிக்கையாளர்களுக்காக ஆகஸ்ட் 10 முதல் அக்டோபர் 9, 2020 வரை இதேபோன்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அபராதம் 25% தள்ளுபடி

பாலிசிதாரர்களுக்கு பாலிஸியை (policy) தாமதமாக கட்டுவதற்கான விதிக்கப்படும் தாமதக் கட்டணத்தில் 20 சதவீதம் அல்லது ரூ .2,000 தள்ளுபடி கிடைக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆண்டு பிரீமியம் (Premium) ரூ .1 லட்சம் முதல் ரூ .3 லட்சம் வரை இருக்கும் நிலையில் 25 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

கோவையில் 25% மானியத்தில் சுயதொழில் கடன் மேளா! இளைஞர்களுக்கு அழைப்பு!

மத்திய அரசின் புதிய PLI திட்டம்! ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு

English Summary: LIC Expired policy can now be easily renewed! LIC has come up with a special program Published on: 21 February 2021, 08:42 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.