1. செய்திகள்

மதி எக்ஸ்பிரஸ்- வாகன அங்காடி! விண்ணப்பிக்க என்ன தகுதி?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Madhi Express Auto Shop Scheme- What is Eligibility to Apply

தருமபுரி மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்களை மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த இடங்களில் மதி எக்ஸ்பிரஸ் வண்டியின் மூலம் விற்பனை செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தெரிவித்து உள்ளார். இதற்காக மாவட்டத்திற்கு 3-மதி எக்ஸ்பிரஸ் வண்டிகள் இலக்கீடு செய்து வரப்பெற்றுள்ளது.

இதனை பயன்படுத்திக்கொள்ள தகுதியான விண்ணப்பத்தார்களிடமிருந்து விண்ணங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதிகள் விவரம்:

  1. மதி எக்ஸ்பிரஸ் (Mathi Express) வண்டிகளுக்கு விண்ணப்பிக்க தேசிய ஊரக வாழ்வாதார இணையதளத்தில் (NRLM Portal) பதிவு பெற்ற மாற்றுத்திறனாளிகள்/சிறப்பு சுய உதவிக்குழுக்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
  2. உறுப்பினர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் (PLF) இணைந்திருக்க வேண்டும்.
  3. முன்னுரிமை அடிப்படையில் மகளிர் மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், விதவை மற்றும் ஒற்றை பெற்றோராக இருக்க வேண்டும்.
  4. இரு சக்கர வாகன உரிமம் கட்டாயம் பெற்றிருத்தல் வேண்டும்.
  5. பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆர்வம் உடையவராக இருத்தல் வேண்டும்.
  6. சிறப்பு சுய உதவிக்குழுவில் மாற்றுத்திறனாளிகள், உறுப்பினர்களாகி ஓராண்டு நிறைவு செய்திருக்க வேண்டும்.
  7. தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு மேல் வாகனம் இயக்கப்படவில்லை எனில் வாகன அங்காடி பறிமுதல் செய்யப்படும்.
  8. தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் மீது எந்த ஒரு புகார்களும், வங்கி மற்றும் சமுதாய அமைப்புகளில் வாராக்கடன் ஏதும் இல்லை எனவும் சான்றிதழ் வழங்க வேண்டும்.

நிபந்தனைகள் என்ன?

மதி எக்ஸ்பிரஸ் (Mathi Express) வண்டியின் உரிமை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திடமே இருக்கும். அங்காடி நடத்துவதற்காக வாய்ப்பு மற்றும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் வாகனத்தை விற்பனை செய்யவோ வேறு நபருக்கு மாற்றவோ உரிமை இல்லை. மதி எக்ஸ்பிரஸ் (Mathi Express) வண்டியை நடத்த இயலாத பட்சத்தில் தருமபுரி மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திடமே (DSMS) ஒப்படைத்திட வேண்டும்.

விதிமுறைகளை மீறி செயல்படும் பயனாளிகள் மீது புகார் வரப்பெறும் பட்சத்தில் மதி அங்காடி வண்டியை திரும்ப பெற்றுகொள்ள இணை இயக்குநர்/திட்ட இயக்கநர் (TNSRLM) மூலம் உரிய ஆலோசனைகள் வழங்கி பறிமுதல் செய்ய மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திற்கு முழு அதிகாரம் உண்டு. தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு மேல் வாகனம் இயக்கப்படவில்லையெனில் மதி அங்காடியை பறிமுதல் செய்யப்படும். பராமரிப்பு செலவினங்களை சம்மந்தப்பட்ட பயனாளியே மேற்கொள்ள வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட தகுதியுடைய பயனாளியிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் நலிவுற்ற குடும்ப உறுப்பினருக்கு முன்னுரிமையின் அடிப்படையில் மாவட்ட அளவிலான குழு தேர்வு செய்யும் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு இறுதி ஆணை வழங்கப்படும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மேற்காணும் விதிமுறைகளின்படி தகுதியான நபர்களின் விண்ணப்பங்களை அலுலவக நேரத்தின்படி 08.06.2023 பிற்பகல் 3.00 மணிக்குள் இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இரண்டாம் தளம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டடம், மாவட்ட ஆட்சியர் அலுலவகம், தருமபுரி 636 705 என்ற முகவரியில் கிடைக்கப்பெறும் வகையில் வரவேற்கப்படுகின்றன.

தாமதமாகவே நாள் கடந்தோ வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், விவரங்களுக்கு அலைபேசி எண்: 04342 233298 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் காண்க:

பசலைக்கீரைக்கு உரம் பயன்படுத்தினால் இவ்வளவு நன்மை இருக்கா?

English Summary: Madhi Express Auto Shop Scheme- What is Eligibility to Apply Published on: 06 June 2023, 10:53 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.