1. செய்திகள்

மாதம் தோறும் 1000 ரூ அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

T. Vigneshwaran
T. Vigneshwaran

Mk Stalin TN Assembly

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் 12,959 கோயில்களில் பணிபுரிவோருக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் சேகர் பாபு என்று அழைப்பதை விட செயல் பாபு என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்றும் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம் கூட்டத் தொடர் முடியும் முன்பே அமலுக்கு வருவது இந்த திட்டம் தான் என்றும் கூறினார்.

24 மணி நேரமும் செயல்படுகிற அமைச்சராக சேகர்பாபு உள்ளார். கோயில் நிலங்களும், சொத்துக்களும் மீட்கப்பட்டு வருகின்றன. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளதாகவும் தமிழில் அர்ச்சனை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு 120 அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளார். அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ள நிலையில் அறநிலையத் துறையின் பொற்காலம் வரவுள்ளது.

அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாகயால் சுமார் 13 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெரும். சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை செயல்படுத்தப்படும். திட்டங்கள் செயல்படுவதை மாதம்தோறும் நானே கண்காணிப்பேன் என்றும் அனைத்து துறைகளையும் முந்திக் கொண்டு செயல்பட்டு வருகிறார் சேகர் பாபு முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க:

தங்கம் விலை: ஒரே நாளில் ரூ. 144 உயர்ந்த தங்கம் விலை!!

தினமும் காலையில் ஓமம் தண்ணீர் குடிக்கவும்!

English Summary: Chief Minister Stalin announces Rs.1000 per month!

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.