1. செய்திகள்

பதக்கப்படி உட்பட 3184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Pongal Medal award

2024 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி 3184 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/ பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதுத்தொடர்பாக தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு-

தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

காவல் பதக்கங்கள் விவரம்:

இந்த ஆண்டு, காவல் துறையில் (ஆண்/பெண்) காவலர், காவலர் நிலை-1, தலைமைக் காவலர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பணியாளர்களுக்கு "தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்" வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர் (சிறப்பு நிலைய அலுவலர்), முன்னணி தீயணைப்போர், இயந்திர கம்மியர் ஓட்டி (சிறப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) இயந்திர கம்மியர் ஒட்டி, தீயணைப்போர் ஓட்டி (தரம் உயர்த்தப்பட்ட இயந்திர கம்மியர் ஓட்டி) மற்றும் தீயணைப்போர் (தரம் உயர்த்தப்பட்ட முன்னனி தீயணைப்போர்) ஆகிய நிலைகளில் 119 அலுவலர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் முதல் நிலை வார்டர்கள் (ஆண்) மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் (ஆண் மற்றும் பெண்) நிலைகளில் 59 பேர்களுக்கும் "தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலைவேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400/- 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் வழங்கப்படும்.

காவல் தொழில்நுட்ப சிறப்பு பணிப் பதக்கம்:

மேலும், காவல் வானொலி பிரிவு, மோப்ப நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 நபர்கள் என ஆக மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு ”தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்" வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கையொப்பத்துடன் கூடிய பதக்கச் சுருள் வழங்கப்படும் எனவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர்களுக்கு அய்யன் திருவள்ளுவர் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் - தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கர் விருதுகளுக்கு இந்தாண்டு தேர்வான நபர்களுக்கு நேற்றைய தினம் விருது வழங்கி முதல்வர் கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read also:

அரசின் பசுமை சாம்பியன் விருது- விண்ணப்பிக்க கடைசித் தேதி அறிவிப்பு!

சோலார் மாவு மில் தயாரிப்புக்கு காப்புரிமை- அசத்தும் சக்தி பம்ப்ஸ்

English Summary: MK Stalin announced Pongal Medal award for 3184 policemen Published on: 14 January 2024, 04:00 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.