1. செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய வசதி: இனி SMS மட்டும் போதும்!

R. Balakrishnan
R. Balakrishnan
Ration Card SMS Facility

ரேசன் கடைகளுக்கு சென்று வாங்குவதில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சிரமம் ஏற்படக் கூடாது என்று நடமாடும் நியாய விலைக் கடைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த சூழலில் எஸ்.எம்.எஸ் மூலம் விவரங்களை பெறும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருப்பதாக சிவில் சப்ளை துணை ஆணையர் சண்முகவேல் தெரிவித்துள்ளார்.​

எஸ்எம்எஸ் சேவை (SMS Service)

நியாய விலைக் கடைகளில் பதிவு செய்து வைத்துள்ள மொபைல் எண்ணில் இருந்து PDS 102 எனக் குறிப்பிட்டு 9773904050 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும். இதன்மூலம் நியாய விலைகள் அன்றைய தினம் திறந்துள்ளதா? இல்லை மூடியிருக்கிறதா? எனத் தெரிந்து கொள்ளலாம். மேலும் PDS 101 எனக் குறிப்பிட்டு 9773904050 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் நியாய விலைக் கடையில் என்னென்னெ பொருட்கள் இருப்பு உள்ளது எனப் பதில் மெசேஜ் வரும்.

அதற்கேற்ப கடைகளுக்கு சென்று வாங்கலாமா? எந்தப் பொருளை வாங்க வேண்டும்? போன்ற விஷயங்களை முடிவு செய்து கொள்ளலாம். இந்த புதிய வசதியின் மூலம் நியாய விலைக் கடைகளுக்கு கையில் பையுடன் சென்று ஏமாற்றம் அடைந்து வருவதை தடுக்க பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் ராஜாராமன் ஐஏஎஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள பொருட்களை கடத்துவது, பதுக்குவது பெரிய குற்றமாகும். மீறி நடந்தால் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாத பொருட்கள் சட்டம் 1980ன் கீழ் தண்டிக்கப்படுவர்.​

புகார் அளிக்க

பொது விநியோகத் திட்ட பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்குதல் தொடர்பான புகார்களுக்கு 18005995950 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட இரண்டு வசதிகளும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிகிறது.

மேலும் படிக்க

PF பணம் எடுக்கும் போது வரி செலுத்த வேண்டுமா? விதிமுறைகள் சொல்வது என்ன?

1.08 லட்சம் கோடி உர மானியம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு!

English Summary: New facility for ration card holders: now only SMS is enough! Published on: 20 May 2023, 11:34 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.