1. செய்திகள்

காட்டு யானை குறித்த அறிக்கை- முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Number of wild elephants in Tamil Nadu increased to 2961

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகளின் காரணமாக தமிழ்நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (8.8.2023) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் "ஒருங்கிணைந்த யானைகளின் கணக்கெடுப்பு 2023" அறிக்கையை வெளியிட்டார்.

தமிழ்நாடு வனத்துறை அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகா அரசுகளின் ஒத்துழைப்புடன், ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பினை 17.05.2023 முதல் 19.05.2023 வரை நடத்தியது. இக்கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள யானைகள் திட்ட இயக்குநரகத்தின் பரிந்துரையின் படி, யானைகளின் எண்ணிக்கையினை நேரடி மற்றும் மறைமுக முறைகளை பயன்படுத்தி கணக்கிடுவதையும், தமிழ்நாட்டின் வனக்கோட்டங்களில் தொகுதி 26 கணக்கிடுதல் முறை மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் நேரடியாக காணப்பட்ட 'யானைகளின் தரவுகளை அடிப்படையாக கொண்டு, யானைகளின் இனத்தொகை கட்டமைப்பினை ஆராய்வதையும் முக்கிய நோக்கமாக கொண்டு நடைபெற்றது.

ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி 2017-ல் 2761 ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை, தற்போது 2961 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் நான்கு பிற யானைகள் காப்பகங்களுடன் ஒப்பிடும்போது நீலகிரி கிழக்கு தொடர்ச்சிமலை யானைகள் காப்பகமானது அதிக எண்ணிக்கையில் அதாவது 2477 யானைகளை கொண்டுள்ளது.

புலிகள் காப்பகத்தில் யானைகளின் எண்ணிக்கை குறித்த பட்டியல் விவரம்:

முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகளின் எண்ணிக்கை:

  • உதகை வனக்கோட்டம்- 444
  • மசினகுடி வனக்கோட்டம்- 346
  • மொத்தம்- 700

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகளின் எண்ணிக்கை:

  • சத்தியமங்கலம் வனக்கோட்டம்- 396
  • ஆசனூர் வனக்கோட்டம்- 272
  • மொத்தம்- 668

ஆனைமலை புலிகள் காப்பகம்:

  • திருப்பூர் வனக்கோட்டம்- 211

இக்கணக்கெடுப்பின் மூலம் ஆண் யானை மற்றும் பெண் யானை சதவிகிதம் 1 : 2.17 ஆக உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலைகளில் 1105 யானைகளும், மேற்கு தொடர்ச்சி மலைகளில் 1855 யானைகளும் உள்ளன. கிழக்கு தொடர்ச்சி மலைகளில் யானைகளின் எண்ணிக்கையை விட மேற்கு தொடர்ச்சி மலைகளில் யானைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.

இந்த ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பில் (12.05.2023 முதல் 16.05.2023 வரையில்) பல்வேறு யானை சரகங்களில் 1731 துறைப்பணியாளர் மற்றும் 368 தன்னார்வலர்கள், என மொத்தம் 2099 பேர் இக்கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 3496 சதுர கி.மீ பரப்பளவிலான 690 பிளாக்குகளில் இக்கணக்கெடுப்பு நடைபெற்றது. ஒவ்வொரு 5 சதுர கி.மீ-க்கு கீழுள்ள சிறு பிளாக்குகளாக பிரிக்கப்பட்டு, 17.05.2023 பல கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 18.05.2023 அன்று யானை பிண்டம் கணக்கெடுப்பு மூலமும், 19.05.2023 அன்று 26 வனக்கோட்டங்களில் நீர்க்குமிழிகள் முறை மூலமும் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மேற்கண்ட கணக்கெடுப்பு முறையானது. டேராடூனில் உள்ள இந்திய விலங்குகள் நிறுவனம், மயிலாடுதுறை ANC கல்லூரி மற்றும் வன பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண்க:

தானியங்கி முறையில் துல்லியமான நீர்பாசனம்- மொபிடெக் வழங்கும் சேவைகள்

ஆகஸ்ட் வந்தாச்சுல- இந்தியாவில் சுற்ற சிறந்த இடம் இதுதான்

English Summary: Number of wild elephants in Tamil Nadu increased to 2961 Published on: 08 August 2023, 03:55 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.