1. செய்திகள்

கொரோனா 3வது அலையின் அறிகுறி தென்படவில்லை- மருத்துவ நிபுணர் தகவலால் நிம்மதி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
No symptoms of corona 3rd wave - relief from medical expert information!

Credit: The Economic Times

கொரோனா 3வது அலைக்கான அறிகுறி இன்னும் தென்படவில்லை என மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் மக்களுக்கு நிம்மதியையும், சற்று ஆறுதலையும் அளித்துள்ளது.

கொரோனா (Corona)

கொரோனா வைரஸ் தொற்று, 2019ம் ஆண்டு தொடங்கி அப்படியேத் தொடர்ந்து வருகிறது. முதல் அலையைக் காட்டிலும், 2-வது அலை மோசனமான பாதிப்புகளை ஏற்படுத்தியது.

3-வது அலை (3rd wave)

முன்னதாக ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில், 3-வது அலை தாக்கப்போவதாக நிபுணர்கள் எச்சரித்து இருந்தனர். குறிப்பாகக் குழந்தைகளைக் குறிவைத்து இந்த 3-வது அலை தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், பெற்றோர் அச்சத்தில் உறைந்திருந்தனர்.

அறிகுறி இல்லை (No sign)

இது குறித்து கருத்து தெரிவித்த பொதுசுகாதார மருத்துவ நிபுணரும் ஒருங்கிணைந்த உயிரியல் மற்றும் மரபியல் மையத்தின் இயக்குனருமான டாக்டர் அனுராக் அகர்வால், ஆனால் கொரோனா 3-வது அலை தொடங்குவதற்கான அறிகுறி இன்னும் தென்படவில்லை என்றார்.

தாமதமாகத் தொடங்கியது (It started late)

தொடர்ந்து பேசிய அவர், டெல்டா வைரஸ் காரணமாக இந்தியாவில் கொரோனா 2-வது அலை ஏற்பட்டது. 2-வது அலை பல மாநிலங்களில் இன்னும் முடிவுக்கு வரவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் தாமதமாக 2-வது அலை தொடங்கியது.

கேரளாவிலும் சில மாநிலங்களிலும் 2-வது அலை தொடர்ந்து நீடித்து கொண்டிருக்கிறது. 3-வது அலை தாக்குவதற்கான அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை.

நீடிக்க வாய்ப்பு (Opportunity to prolong)

2-வது அலை இன்னும் தொடர்ந்து நீடிக்கலாம். அது இன்னும் பல பகுதிகளில் தாக்குதலைத் தொடங்கவே இல்லை. அது மேலும் உயர்கிறதா? என்பதைக் கவனிக்க வேண்டியது அவசியம்.

விளைவு மோசம் (The effect is bad

ஒரு வேளை 3-வது அலை உருவானால் ஏற்கனவே தாக்கிய முதல் இரண்டு அலைகளையும் விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதிக மருத்துவ வசதிகள் தேவைப்படலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிறப்பு பணிக் குழு (Special Task Force)

இதனிடையே கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராகி வருகிறது. இதையொட்டி, கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு பணிக்குழுவையும் அமைத்துள்ளது.

ஆலோசனை வழங்கப்படும் (Advice will be provided)

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான இந்தக்குழுவில் 13 மூத்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகள் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்த குழு அரசுக்கு ஆலோசனை வழங்கும்.

மேலும் படிக்க....

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் உதவி பெற இணையதளம் அறிமுகம்!

பழைய நாணயங்கள் விற்பனையில் எச்சரிக்கை தேவை: ரிசர்வ் வங்கி!

English Summary: No symptoms of corona 3rd wave - relief from medical expert information!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.