1. செய்திகள்

வாக்கு எண்ணிக்கைக்கு தடை? தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Prohibition on counting votes? High Court warns Election Commission

Credit : India TV

வாக்கு எண்ணிக்கையின்போது, கொரோனா தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் (Assembly Election)

கொரோனா 2வது அலையின் தொற்றுப்பரவல் தமிழகத்தில் ஓரளவுக்குப் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. இந்நிலையில், மாநில சட்டமன்றத் தேர்தலை நடத்தத் தேர்தல் ஆணையம் முன்வந்தது.

உயர்நீதிமன்றம் எச்சரிக்கை (High Court warns)

இதையடுத்துத் தேர்தல் பிரசாரத்தின்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

பின்பற்றாத அரசியல் கட்சிகள் (Non-compliant political parties)

ஆனால் இந்த எச்சரிக்கைகளைக் காற்றில் பறக்கவிட்டே பிரசாரத்தை நடத்தின அரசியல் கட்சிகள். இதன் விளைவாக கொரோனாத் தொற்றுப் பரவல் வேகமாகப் பரவி வருகிறது.

அமைச்சர் வழக்கு (Minister case)

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கரூரில் வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடக்கோரி தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரும், கரூர் அதிமுக வேட்பாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

இடைவெளியைக் பின்பற்ற முடியாது (Can't follow the gap)

2 அறைகளில் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. கொரோனா 2வது அலை பரவி வரும் நிலையில் 77 வேட்பாளர்களின் முகவர்களையும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கும் போது தனிமனித இடைவெளியைப் பின்பற்ற முடியாது. கொரோனா நடைமுறைகளைப் பின்பற்ற முடியாத நிலை ஏற்படும் என அமைச்சர் தனது மனுவில் கூறியிருந்தார்.

மருத்துக் குழு (Medical Team)

வாக்கு எண்ணிக்கையை 3 அறைகளில் நடத்த வேண்டும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் முகவர்களை அனுமதிக்க வேண்டும், மருத்துவக் குழுவை பணியில் அமர்த்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்தல் ஆணையமும் காரணம் (The Election Commission is also to blame)

இந்த வழக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கொரோனா 2ம் அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமும் ஒரு காரணம் என நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

கொலைக் குற்றம் (The crime of murder)

அரசியல் கட்சிகளும் இஷ்டம்போல் பிரசாரம் செய்தது கொரோனா பரவலுக்குக் காரணம். நீதிமன்றம் எவ்வளவு அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் காதில் வாங்கவில்லை. தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்துகொண்டிருந்த நேரத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வேற்றுக் கிரகத்தில் இருந்தார்களா? கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளுக்காகத் தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தினாலும் தவறில்லை.

தடை விதிக்கப்படும் (Will be banned)

வாக்கு எண்ணிக்கை நாளன்று அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பு விதிகளை முறையாகப் பிற்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாக்கு எண்ணிக்கையின்போது கரூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உரிய பாதுகாப்பு தரப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தலைமைச் செயலாளர் மற்றும் இயக்குனரிடம் உரிய ஆலோசனை பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி நீதிபதிகள் கூறினர்.

மேலும் படிக்க...

தமிழகத்திற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசி வருகை! சுகாதாரத் துறைத் தகவல்!

கொரோனா தடுப்பு நடவடிக்கை! நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்!

கொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு! ஆய்வு செய்ய அரசு அனுமதி!

English Summary: Prohibition on counting votes? High Court warns Election Commission

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.