1. செய்திகள்

இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு! மாவட்டங்கள் பற்றிய முழு விபரம் உள்ளே!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Chance of rain today and tomorrow! Full details of the districts inside!

Credit : The Weather Chennai

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

வளிமண்டல சுழற்சி (Atmospheric circulation)

பீகார் முதல் தென் தமிழக கடலோரப் பகுதி வரை, 1கிலோமீட்டர் உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)

26.04.21 மற்றும் 27.04.21

  • இதன் காரணமாக,மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்,கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

  • தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

  • ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவைக் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

28.04.21 முதல் 30.04.21 வரை

  • மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, ஈரோடு,கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

  • ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவைக் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

  • கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH-Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால், காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும்.

சென்னை (Chennai)

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வெப்பநிலை (Temperature)

அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.

அதிகமாக வியர்க்கும் (Excessive sweating)

  • காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH-Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால், பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.

  • தேவைக்கு ஏற்ப குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளவும்.

ஆடைகள் (Dress)

வெள்ளை மற்றும் வெளிறிய வண்ணம் கொண்ட (Light color) கதர் அடைகளை அணிவது சிறந்தது.

மழைபதிவு (Rainfall)


கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)

மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவுமில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

உலக பூமி தினம்! பிளாஷ்டிக்கை தவிர்த்து, நம் பூமியை மீட்டெடுப்போம்!

கோடையில் உடல் நலம் காக்கும் கீரைகள்! ஆர்வத்துடன் உழைக்கும் விவசாயிகள்

தேயிலை செடிகளை தாக்கும் சிவப்பு சிலந்தி நோய்! விவசாயிகள் கவலை!

English Summary: Chance of rain today and tomorrow! Full details of the districts inside!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.