1. செய்திகள்

ரேஷன் கடைகளில் கியூ ஆர் கோடு பணப்பரிவர்த்தனை |ஆடு வளர்ப்பு பயிற்சி|புகார்களுக்கான போர்ட்டல்

Yuvanesh Sathappan
Yuvanesh Sathappan
Q R Line Cashing in Ration Shops |Goat Husbandry Training|Grievances Portal
1,ரேஷன் கடைகளில் கியூ ஆர் கோடு பணப்பரிவர்த்தனை: காஞ்சிபுரத்தில் அறிமுகம்!
 
தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் மின்னணு பரிமாற்றம் (கியூ ஆர் கோடு) மூலம் பணமற்ற பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட டெம்பிள் சிட்டியில் உள்ள எம்.வி.எம்.பி. நகர் ரேஷன் கடையில் சென்னை, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார்.
2,ஆடு வளர்ப்பு பண்ணை அமைக்க அரசு சான்றிதழுடன் கூடிய சிறப்பு ஒரு நாள் பயிற்சி முகாம்.
 
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் 50% மானியத்தில் ஆடு வளர்ப்பு பண்ணை அமைக்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கான அரசு சான்றிதழுடன் கூடிய சிறப்பு ஒரு நாள் பயிற்சி முகாம் 10.05.2023 அன்று நடைபெறுகிறது.
 
ஆட்டுப்பண்ணையை தொடங்குவது முதல் அதனை சிறப்பாக செயல்படுத்துவதற்கான அனைத்து தொழில்நுட்ப ஆலோசணைகள் மற்றும் ஆட்டுப்பண்ணையம் அமைக்க அரசு திட்ட அறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல் வழங்கபப்டும். ஆடு வளர்ப்பில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் நேரடியாகவோ அல்லது மேற்காணும் தொலைபேசி எண் வழியாக தொடர்பு கொள்ளவும்.
 
91-94899 50555
 
91-94431 02139
 
91-94863 79484
 
04563-220244
 
அனைத்து மாவட்ட கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். முன் பதிவு மிக அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.
 
3.பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம் பிள்ளையார்பட்டியில் மே மாத இலவச பயிற்சி விவரம்
 
இரண்டு நாட்கள் பயிற்சி
 
18.05.2022 & 19.05.2023 தேங்காய் ஓட்டிலிருந்து கலை பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
 
24.05.2023 - 25.05.2023 சிறு தானியங்களில் இருந்து உணவு பண்டம் தயாரித்தல் தொழில்நுட்பம்.
 
22.05.2023 -31.05.2023 கூடை பின்னுதல் பயிற்சி
 
கீழே கொடுக்கப்பட்டுள்ளதொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 9488575716
4,ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காத மக்களுக்கு ஜூலை 1 முதல் ரேஷன் பொருட்கள் கிடையாது
 
ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காத பொது மக்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
5,தமிழ்நாடு உணவுத் துறையின் புகார்களுக்கான போர்ட்டல்
 
தமிழ்நாடு உணவுத் துறையின் புகார்களுக்கான போர்ட்டல் இணையதளத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அணுகலாம். மேலும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுக ஸ்கிரீன் ரீடர் வசதியும் உள்ளது.
 
ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், உணவுப் பாதுகாப்புத் துறையின் மொபைல் ஆப் மற்றும் இணையதளத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
 
‘தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு நுகர்வோர்’ என்ற மொபைல் செயலி மற்றும் www.foodsafety.tn.gov.in என்ற இணையதளத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார், இதில் நுகர்வோர்கள் பாதுகாப்பான உணவு மற்றும் இதர விவரங்களைக் கண்டறியலாம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இணையதளத்தை அணுகலாம் மேலும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுக ஸ்கிரீன் ரீடர் வசதியும் உள்ளது.
மேலும் படிக்க
English Summary: Q R Line Cashing in Ration Shops |Goat Husbandry Training|Grievances Portal Published on: 07 May 2023, 05:31 IST

Like this article?

Hey! I am Yuvanesh Sathappan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.