1. செய்திகள்

ரயில் டிக்கெட் கென்சல் செய்தால் GST.. மத்திய அரசு புதிய விதிமுறை!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Train Ticket Booking

ரயிலில் பயணிப்பது சவுகரியமான அனுபவமாக இருந்தாலும், ரயில் டிக்கெட் பதிவு செய்வது அவ்வளவு ஈசியான வேலை இல்லை. ரயில் டிக்கேட் முன்பதிவு தொடங்கி ரயில் டிக்கேட் கென்சல் செய்வது வரை பலருக்கும் பல குழப்பங்கள் உள்ளன. அந்த வகையில் ரயில் டிக்கேட் முன்பதிவு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயம் மற்றும் மத்திய அரசின் புதிய விதிமுறை, இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ரயில் டிக்கெட் முன்பதிவு (Train Ticket Reservation)

தற்போது நடைமுறையில் உள்ள ரயில் டிக்கெட் முன்பதிவு முறை சுமார் 30 ஆண்டுகள் பழைமையானது. இந்நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் இருக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக Grant Thornton நிறுவனத்துடன் ரயில்வே ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. ரயில் டிக்கெட் ரிசர்வேஷன் அமைப்பை மேம்படுத்துவது குறித்து Grant Thornton நிறுவனம் அறிக்கை சமர்ப்பிக்க இருக்கிறது. இதன்பிறகு ரயில் டிக்கெட் முன்பதிவு அமைப்பு மறுசீரமைப்பு செய்யப்படும்.

ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. ஒன்று, ஒரே நேரத்தில் ஏராளமானோர் டிக்கெட் முன்பதிவு செய்ய முயல்வதால் லோடு தாங்க முடியாமல் சர்வர் திணறுவது. இதனாலேயே பெரும்பாலானவர்கள் அவதிப்படுகின்றனர்.
இரண்டாவது, போலி கணக்குகளை வைத்துக்கொண்டு முன்பதிவு அமைப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் நபர்கள்.

இவ்விரண்டு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. எனவே, ஈசியான ரயில் டிக்கெட் முன்பதிவு முறை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து, ரயில் டிக்கேட் கேன்சல் குறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்படி, உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை ரத்து செய்வதற்கும் GST கட்டணம் வசூலிக்கப்படும்.

ஏனெனில், உறுதி செய்யப்பட்ட ஒரு ரயில் டிக்கெட் என்பது சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கும், ரயில்வேக்கும் இடையேயான ஒரு ஒப்பந்தமாக கருதப்படுகிறது. எனவே, முதல் வகுப்பு மற்றும் ஏசி வகுப்பு ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்தால், ரத்து கட்டணத்துக்கு (cancellation fee) 5% GST வசூலிக்கப்படும்.

மேலும் படிக்க

கோயம்புத்தூர்: பச்சை நிறத்தில் தயாரிக்கப்பட்ட குக்கீகள் ஆன்லைனில் அறிமுகம்

வேளாண் உள்கட்டமைப்பு நிதி (AIF) அரசின் நிதியுதவி, ஒரு தொகுப்பு

English Summary: Reorganization in train ticket booking: Now everything is easy! Published on: 17 August 2022, 08:12 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.