1. செய்திகள்

Post Office:10 ஆம் வகுப்பு போதும், 98,000 காலியிடங்கள்

T. Vigneshwaran
T. Vigneshwaran
Post Office Jobs

அரசு வேலை வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு. அதுவும் மத்திய அரசு. ஆமாம், இந்திய தபால் துறையில் 98,083 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் போஸ்ட்மேன், மெயில் கார்டு மற்றும் பன்முக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 9,619 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காலியிடங்களின் விவரம்

போஸ்ட்மேன் (Post Man) – 59,099

மெயில் கார்டு (Mail Guard) – 1445

பன்முக உதவியாளர் (Multi-Tasking Staff) – 37,539

தமிழக காலியிடங்களின் விவரம்

போஸ்ட்மேன் – 6,130

மெயில் கார்டு – 128

பன்முக உதவியாளர் – 3,361

கல்வித் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப செயல்முறை விரைவில் இணையதளத்தில் தொடங்கப்பட உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தேர்வர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: 

தேசியக்கொடியை எப்படி மடித்துப் பாதுகாக்க வேண்டும்?

38,000 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

English Summary: Post Office: 10th standard enough, 98,000 vacancies Published on: 17 August 2022, 06:49 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.