1. செய்திகள்

இன்று தங்கத்தின் விலை நிலவரம், சவரன் எவ்வளவு தெரியுமா?

Dinesh Kumar
Dinesh Kumar
Rising Gold Price…

வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையில் இருந்து ஏற்ற இறக்கத்துக்குப் பிறகு தங்கம் விலை இன்று உயர்ந்தது.கடந்த சில நாட்களாக, உலக காரணிகள், சர்வதேச சந்தையின் நிலை, மக்களின் வாங்கும் திறன் போன்றவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படுவதை நாம் பார்த்து வருகிறோம்.

இருப்பினும், வரும் ஆண்டுகளில் தங்கத்தின் விலை உயரும் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இது மக்களிடையே பெறுமதிர்ச்சியை அளிக்கிறது.

உலகளாவிய ஏற்ற இறக்கம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தியது, சில சமயங்களில் சந்தை ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கம் ஏற்படுகிறது.

உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக தங்கம் வாங்குவதில் தற்போது பெரும் குழப்பம் நிலவுகிறது. இந்த நெருக்கடி உலக தங்க சந்தையில் பெரும் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தங்கத்தின் விலை நிலவரம்:

சென்னையில் இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 30 அதிகரித்து ரூ. 4,835-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம், ரூ. 240 அதிகரித்து 38,680 ஆக உயர்ந்து இருக்கிறது. தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ளது.

வெள்ளி விலை நிலவரம்:

சென்னையில் நேற்று மாலை நிலவரப்படி வெள்ளியின் விலை ரூ. 65.50-க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ. 0.50 குறைந்து ரூ. 65.00 விற்பனை செய்யப்படுகின்றது.

இந்தியாவைப் பொறுத்த வரையில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் வெவ்வேறு மாநிலங்களில் மாறுபடுகிறது. வரி வகையைப் பொறுத்து வெவ்வேறு இடங்களில் விலைகள் மாறுபடும். மேலும், செலவு மற்றும் சேதம் ஆகியவற்றின் அடிப்படையில், கடைக்கு கடை விலையில் ஏற்ற இறக்கங்களைக் காண முடியும்.

தங்கத்தின் இந்தக் கிடுகிடு விலை உயர்வு, கல்யாணம் வைத்திருப்பவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தேசிய அளவில் தங்கத்தின் விலை குறித்து பல ஊகங்கள் உள்ளன. இருப்பினும், உலகெங்கிலும் உள்ள பல பொருளாதார வல்லுநர்கள் தங்கத்தின் மீது நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டுள்ளனர். அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் தங்கம் ஒரு அவுன்ஸ் $3,000-5,000 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோரின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க:

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலையில் மாற்றம்! விலை நிலவரம் உள்ளே!

திடீரென உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்!

English Summary: Rising Gold Price… How much do you know about shaving today (May 12. 2022)? Published on: 12 May 2022, 12:53 IST

Like this article?

Hey! I am Dinesh Kumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.