1. செய்திகள்

ரூ.1000 கோடி: நவீன முறையில் சேவல் சண்டை நடத்த திட்டம்!

Poonguzhali R
Poonguzhali R
Rs.1000 Crore: A plan to conduct cockfighting in a modern way!

நவீன முறையில் சேவல் சண்டை நடத்தப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, ரூ.1000 கோடி வரை பந்தயம் கட்டி ஆடலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.

ஆந்திர மாநிலத்தில் சேவல் சண்டை பிரபலமான ஒரு விளையாட்டாக நடத்தி வருகின்றனர். இதற்காக வீரியமிக்க சேவல் குஞ்சுகளை வாங்கி வந்து பாதாம், முந்திரி, பிஸ்தா உள்ளிட்ட தரமான உணவு அளித்து சண்டை பயிற்சி அளித்து வருகின்றனர்.

சுமார் ஐந்து அடி உயரம் வரை வளர்க்கப்படும் இந்த சேவல்களின் கால்களில் கூர்மையான கத்தி கட்டப்பட்டு மற்றொரு சேவலுடன் மோத விடுவது வழக்கம். சேவல்கள் ஒன்றுடன் ஒன்று ஆக்ரோஷத்துடன் உயரே பறந்து சண்டையிடும் காட்சியை காண ரசிகர்கள் வருகை தருவது வழக்கம்.

சேவல் சண்டை ஆர்வம் உள்ளவர்கள் சண்டையிடும் சேவல்கள் மீது ரூ.1000 முதல் ஒரு லட்சம் வரை பந்தயம் கட்டுவது என்பதும் வழக்கம். பந்தயம் கட்டியவர்களின் சேவல் வெற்றி பெற்றால் 3 மடங்காக பணம் திரும்பத் தரப்படும். இந்நிலையில் ஆந்திராவில் சேவல் சண்டை நடத்த மாநில அரசு தடை விதித்துள்ளது. ஆகையால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் சேவல் சண்டை அமைப்பாளர்கள் சங்கராந்தி என அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை அன்று சேவல் சண்டைகளை ஆன்லைனில் நடத்த திட்டம் தீட்டி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கென ஜிஇ 5 கி நெட்வொர்க் சேவையை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக சேவல் சண்டை அமைப்பாளர்கள் வட இந்திய சந்தையை தேர்ந்தெடுத்து உள்ளனர்.

தற்பொழுது சேவல் சண்டை சோதனை ஓட்டம் நடத்தி வருகின்றனர் சண்டையை தொடங்குவதற்கு முன்பு சேவல்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவிடப்படுகின்றன. சூதாட்டத்தில் ஆர்வமுள்ளவர்களை கொண்டு ரகசிய குழுக்களை உருவாக்கி இதை நடத்த இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க

Aavin: ஆவின் பணி நியமனத்தில் புதிய அறிவிப்பு: பால்வளத்துறை அதிரடி

PMEGP: 100 நாள் வேலை திட்டத்தில் ஒரு நாளைக்கு 600 ரூபாய் சம்பளம்!

English Summary: Rs.1000 Crore: A plan to conduct cockfighting in a modern way! Published on: 04 January 2023, 03:19 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.